notification 20
Misc
சில ஜோடிகள் யூடூப்பில் வீலாக் வீடியோ வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? இந்த விடீயோக்களை வேலை இல்லாமல் பார்க்கும் முட்டாள் மக்களை என்ன என்று சொல்வது?

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஏதாவது சந்தேகம் என்றால் உடனே தெரிந்து கொள்ள கூகுள் வலை தளத்திற்கு சென்று தேடி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். எப்போது இந்த யூடூப் வந்ததோ அப்போதில் இருந்தே மக்கள் எளிமையாக தங்கள் சந்தேகங்களை யூடூப் சென்று தீர்த்துக் கொள்கிறார்கள். இது ஒருவகையில் நல்லது தான் என்றாலும் சிலர் யூடியூபில் பணம் சம்பாதிக்க என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சில வேலைகளை செய்துவருகிறார்கள்.

மீன் கொளம்பு செய்வது எப்படி என்று நாம் யூடியூபில் சென்று டைப் செய்தால் பல விதமான மீன்கொளம்பு செய்யும் விடியோக்கள் வரும். இதுபோல நமக்கு என்ன சந்தேகமோ அதை நாம் யூடியூபில் டைப் செய்தால் அதற்கான விடை நமக்கு கிடைத்துவிடுகிறது. இதற்காக நாம் கூகுள் சென்று சர்ச் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஆனால் ஒரு சிலர் குறிப்பிட்ட அளவில் தங்கள் சேனல் ரசிகர்களை அதிகரித்துக்கொண்டு வீலாக் விடீயோக்களை செய்துவெளியிடுகிறார்கள். அதாவது தங்களிடம் ஒரு பத்தாயிரம் ரசிகர்கள் கொண்டு வந்த பின்னர் தாங்கள் எதற்காக சேனல் ஆரம்பித்தார்களோ அந்த வேலையை விட்டுவிட்டு தேவை இல்லாமல் தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து லைவ் விடீயோக்களை வெளியிடுகிறார்கள்.

நாள் முழுவதும் நாங்க பல்லு வெளக்குறோம், குளிக்கிறோம், சாப்பிடுறோம், எங்க குழந்தை சேட்டை பண்ணுறான் என்று தொடர்ந்து தங்கள் குடும்ப விடீயோக்களை வெளியிடுகிறார்கள். இந்த விடீயோக்களையும் லட்சக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் மணிக்கணக்கில் ஒக்காந்து பார்க்கிறார்கள். நம்மை போல் பார்க்கும் ரசிகர்கள் இருப்பதால்தான் இவங்க கண்ட மேனிக்கு விடீயோக்களை போடுகிறார்கள். நீங்க பார்ப்பதை நிறுத்திவிட்டால் ஒழுங்கான விடீயோக்களை அவங்க போடுவாங்க, காரணம் அவங்களுக்கு பண வருவாய் குறைந்து விடும். இனியாவது இந்த மாதிரியான தேவை இல்லாமல் விடியோக்கள் பார்ப்பதை நிறுத்திக்கொண்டால் பல நல்ல, நமக்கு தேவையான விடீயோக்களை யூடூப்பில் பார்க்கலாம்.

Share This Story

Written by

Karthick View All Posts