notification 20
Lushgreen
கடைசியா மண்டமேல இருந்த கொண்டைய மறந்துட்டேங்களே பாஸ்! காப்பி அடிப்பதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா? யோகிபாபுவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் அண்மை காலமாக இவர் நடிக்காத படங்களே இருக்காது. இவர் நடிச்சாலே படம் ஹிட் ஆகிவிடும் என்ற ராசியில் முன்னணி நடிகர்கள் இவரை படத்தில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இப்போதுகூட விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார்.

அதுவும் விஜய் படத்தில் இவரை பார்க்காமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு விஜய்க்கு ரொம்ப பெட் ஆகிவிட்டார். யோகி பாபு நடிப்பில் கூர்க்கா, ஜாம்பி, மண்டேலா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த வெற்றியின் காரணமாக நானும் தனியா ஹீரோவாக நடிப்பேன் என்று சில படங்களில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

யோகிபாபு நடிப்பில் பே*ய்மாமா என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த படத்தை பற்றிய எந்த விஷயங்களும் கடந்த சில நாட்கள் வரை வெளியாகவில்லை. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பே*ய்மாமா படம் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் சம்மந்தமான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

தற்போது இந்த போஸ்டர் 2020ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பூத் படத்தின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏப்பா போஸ்டரையே இப்படி காப்பி அடிச்சு வச்சுருக்கீங்களே, படத்த மட்டும் நீங்களா எடுத்துருப்பீங்க, அந்த படத்தை தான் எடுத்து வச்சுருப்பீங்க என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துவருகின்றனர்.

Share This Story

Written by

Karthick View All Posts