Daily News

'ஜெய் யோகி பாபா' மந்திரத்தால் கவனம் ஈர்த்த பக்தர்! முதலமைச்சருக்கு கோவில் கட்டி கொண்டாடும் அதிசயப்பிறவி!

Sep 19 2022 11:51:00 AM

உத்தர பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கு தொண்டர் ஒருவர் கோவில் கட்டி கொண்டாடி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதாகும் அந்த தொண்டரின் பெயர் பிரபாகர் மவுரியா என்பதாகும். இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டி பூஜை செய்வதற்கு காரணம் ராமர் கோவில் தான்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் என்ற அதிசயம் யோகி முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் தான் நிகழ்ந்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமாக இருப்பவருக்கு தான் ஒரு கோயிலை கட்ட வேண்டும் என்று முடிவு செய்த பிரபாகர் மவுரியா ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கிய அதே நாளில் யோகிக்கு ஒரு கோயிலை கட்ட தொடங்கியுள்ளார்.

prabhakar mavuriya BJP Yogi adityanath temple Uttar pradesh

பாரதிய ஜனதா கட்சிக்காக நிறைய பாடல்களை உருவாக்கியுள்ள பிரபாகர் மவுரியா ஒரு யூடியூபர் ஆவார். 20 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலுக்குள் யோகி ஆதித்யநாத்தின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருடைய கைகளில் வில் அம்பும் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி சிலையின் தலைப்பகுதிக்கு பின்னால் சூரியன் வடிவிலான ஒளி வட்டமும் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இவர் எந்த அளவுக்கு யோகியை நேசிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

prabhakar mavuriya BJP Yogi adityanath temple Uttar pradesh

தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு இவர் சுயமாக இந்த கோவிலை கட்டியெழுப்பியுள்ளார். இந்த கோவிலை உருவாக்க இவருக்கு 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. கோவில் கட்டியது மட்டுமின்றி தினமும் இரு வேளைகள் பூஜையும் செய்து வருகிறார் பிரபாகர் மவுரியா. கையில் தீபாராதனையுடன் ஜெய் யோகி பாபா என்ற கோஷத்தை உரக்க சொல்லி பூஜை நடத்திவரும் மவுரியா தன்னுடைய சொந்த கைவண்ணத்தில் பாடல்களையும் இயற்றி பாடிவருகிறார்.