அமெரிக்காவின் மிகப்பிரபலமான இடங்களில் ஒன்றாக இருப்பது தான் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா. மிகப்பிரபலமான இந்த பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க குறைந்தது 3 முதல் 5 நாட்கள் தேவைப்படும். இந்த பூங்காவில் எரிமலைகள் மட்டுமல்லாது ஓநாய், கிரிஸ்ஸி கரடிகள், காட்டெருமைகள், நரிகள் என்று பல அரியவகை விலங்குகளும் உள்ளன.
எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த பூங்காவின் சிறப்பம்சம் இது கோடைகாலம், குளிர்காலம் என்று எல்லா பருவ காலங்களுக்கும் ஏற்ற ஒரு இடமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கிரிஸ்ஸி கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சில கட்டுப்பாடுகளுடன் புகைப்படம் எடுக்க இந்த பூங்காவில் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகளை மீறிய ஒரு பெண் கிரிஸ்ஸி கரடியின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க ஆயத்தமானார். அப்போது தனது குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த கரடி பெண்ணின் இந்த செயலால் கோ பமடைந்து அவரை தா க்க முற்பட்டுள்ளது. இதனால் அ திர்ச்சியடைந்த அந்தப்பெண் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்த காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில் பூங்கா அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.
100 மீட்டர் தொலைவில் இருந்து தான் விலங்குகளை பார்வையிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதை மீறி புகைப்படம் எடுக்க சென்ற அந்தப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.