நாக்கை வைத்து சாப்பிட முடியும். சுவைகளை உணர முடியும். இதெல்லாம் தானே நீங்கள் நாக்கைப்பற்றி அறிந்துள்ள விஷயங்கள். ஆனால் நாக்கின் மூலம் ஒரு மனிதர் கின்னஸ் சாதனை படைக்க முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாக்கை வைத்துக்கொண்டு கின்னஸ் சாதனை என்றால் அதிகமாக சாப்பிட்டு எதாவது சாதனை படைத்திருப்பாங்க என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது பாட்டு பாடும் சாதனை, புத்தகம் வாசிக்கும் சாதனை இப்படிக்கூட நீங்கள் கற்பனை செய்யலாம். ஆனால் இப்படி பெரிதாக எந்தக்காரியமும் செய்யாமலே ஒருவருடைய நாக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டாபெர்ல் என்ற நபர் தான் இந்த கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர். இவருடைய நாக்கை பார்த்தால் நீங்க பயந்து போயிடுவீங்க. யாருய்யா இவரு பேய் மாதிரி நாக்கை நீட்டுகிறாரே என்று நினைப்பீங்க. விஷயமே அது தான். உலகிலேயே மிக நீண்ட நாக்கு கொண்ட மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிசய மனிதரின் நாக்கு சுமார் 10.10 சென்டிமீட்டர் நீளமாக உள்ளது. கிராபிக்ஸ் எதுவும் இல்லை. உண்மையாகவே இவருடைய நாக்கு இவ்வளவு தூரத்துக்கு நீள்கிறது. இவருடைய நாக்கை வைத்து இவரால் மூக்கை எளிதாக தொட முடியும். இவருடைய நாக்குக்கு இவர் ஸ்பெஷல் தீனி எதுவும் போட்டு வளர்க்கவில்லை. இது இயற்கையின் அதிசயம். ஒரு சில மனிதர்களுக்கு இவ்வாறு நீண்ட நாக்கு காணப்படும்.
தம்மாத்தூண்டு நாக்கை வைத்துக்கொண்டே நம்ம ஊரு பொம்பளைங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியல. தெருவில் இருக்கும் தண்ணீர் குழாய் தொடங்கி பல்வேறு இடங்களிலும் அவுங்க பேசுற பேச்சை காது கொடுத்து கேட்க முடிவதில்லை. அவுங்களுக்கு மட்டும் இவரைப்போல நீளமான நாக்கு இருந்தால் அவுங்க கணவரின் நிலை என்னவாகும்? திருவள்ளுவர் சொன்னது போல நாவை அடக்காமல் விட்டால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது ஆண்கள், பெண்கள் அனைவருக்குமே பொருந்தும். நிக் ஸ்டாபெர்ல் பாவம் என்ன செய்வார். அவரே நினைத்தாலும் அவருடைய நாக்கை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. அவரது நாக்கு அவருக்கு பிரச்சனையை கொடுக்கிறதோ இல்லையா எனத்தெரியவில்லை. ஆனால் கின்னஸ் புத்தகத்தில் இடம் வாங்கிக்கொடுத்துள்ளது. இதனால் அவருடைய நாக்கு அதிர்ஷ்டம் மிக்கது என்று வைத்துக்கொள்ளலாம்.