சினிமாவில் நடித்தால் உலகப் புகழ் அடைந்துவிடலாம் என நாம் நினைப்பதெல்லாம் வெறும் மாயை தான். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கூட தாங்கள் யார் என்ற அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதே சினிமாவில் வெறும் சில படங்களில் நடித்து சில நடிகர்கள் உலக அளவில் புகழ் அடைந்துவிட்டார்கள். அந்த நடிகர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
KGF படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் தான் யாஷ். கன்னட படங்கள் பெரிய அளவில் அனைவராலும் ரசித்து பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கன்னட சினிமாவில் நடித்து வந்தவர் தான் இந்த யாஷ். இவர் KGF படத்தில் நடித்து அந்த படமும், இவரும் உலக அளவில் பேமஸ் ஆனார்கள். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் இவருக்கு தங்குவதற்கு கூட இடம் கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். இன்று அதே பேருந்து நிலையத்தில் இவருக்கு மிகப்பெரிய அளவில் பிளக்ஸ் வைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
பாகுபலி படத்தில் நடிப்பதற்கு முன்னர் சாதாரண தெலுங்கு பட நடிகராகத்தான் பிரபாஸ் வலம்வந்தார். பாகுபலி படத்தில் நடித்த பின்னர் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்துக் கிடக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் சாதாரண டிவி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய ஸ்டாண்டப் காமெடி மற்றும் மெமிக்ரி மூலம் சினிமாவில் கால்தடம் பதித்தார். இவரெல்லாம் வெறும் 2, 3 படம் நடிக்க தான் லாயக்கு என்று கிண்டல் செய்தவர்களே இப்போது இவரை வைத்து படம் எடுக்க வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் க ஷ்டப்பட்டு வாய்ப்புகள் கிடைக்காமல் சுற்றித் திரிந்தவர் விஜய் சேதுபதி. பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வளம் வருகிறார்.