எதுவாக இருந்தாலும் உங்கள் உடலுக்கு ஏற்ற ஆடைகளை எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். நம் சமூகத்தில் சரியான உடை அணியாமல் பலர் உள்ளனர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெருமையாகக் காட்டுவது முக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல தாய், தந்தையாக இருந்தால், அவர்கள் குழந்தைகளுக்கு துப்பட்டா போடும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். இதை சொன்னால் துப்பட்டா போடுங்க தோழி குரூப் என்பார்கள். இருக்கட்டும் அப்படி சொல்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களை நம்பிய பெண்களுக்கு தான் எல்லாமே.
இன்றைய பெண்கள் துப்பட்டா அணியாமல் இருக்க நாகரீகம், பெண்ணியம், உளவியல், தான் தோன்றித் தனம் ஆகியவை காரணமாகும். தன் பெண் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லவேண்டிய அம்மாவே, துப்பட்டா இல்லாமல் வீதியில் கூச்சமில்லாமல் செல்கின்றனர். இதில் சில பேர் சுடிதாரில் கையே இல்லாமல் போட்டுக்கொண்டு பஸ்ஸில் வரும்போது கையை தூக்குவாங்க பாருங்க. நமக்கே அசிங்கமாயிருக்கும். அதை தவறு என்பதை உணரமாட்டோம் என்கிறார்கள். இதெல்லாமா பெண் சுதந்திரம்?
கேட்டால் உங்கள் பார்வையில் தப்பு இருக்கு என பெண்ணியம் பேசுவாங்க. ஆண் பெண் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இது போல வரும்போது தேவையில்லாத சங்கடங்கள் நிறைய நடக்கிறது. அனுபவத்தில் உணர்ந்தவை இதெல்லாம். என்னோட அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழையும் என்று. பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு கல்லூரி பெண் பேசிக்கொள்கிறாள். நாளைக்கு ஷால் போடாமல் வந்து என் ஆளை அசத்தப் போறேன்டின்னு. நல்லா வளர்ந்து இருக்கு நாகரீகம்.