Daily News

மேலிட காண்டாக்ட் ஈஸியா கிடைக்குது - ட்விட்டரில் புகுந்து அசத்தும் பெண் பஞ்சாயத்து தலைவி!

Aug 09 2022 01:48:00 PM

44 வயதான பாப்பாத்தி நடராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பந்தளம் கிராம பஞ்சாயத்தில் இரண்டாவது முறையாக பஞ்சாயத்து தலைவராக உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தனது பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் குடியேறியவர்களும் பிரச்சினைகளைத் தீர்க்க சோஷியல் மீடியாவில் தன்னைத் தொடர்பு கொல்வதாக கூறுகிறார். 2006-2011ல் பஞ்சாயத்து தலைவராகன் இருந்தேன். அந்த காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. 

Social Media Panchayat Tamilnadu

2021ல் மீண்டும் பஞ்சாயத்து தலைவரானதும்  ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் கணக்குகளைத் தொடங்கினேன், அது மக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான எனது தொடர்பை விரைவுபடுத்தியது, என்று தெரிவித்தார். கிராமத்தில் திட்டமிடப்பட்ட பட்டா பரிமாற்றம், முதியோர் ஓய்வூதியம் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த பல்வேறு சிறப்பு முகாம்கள் குறித்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

Social Media Panchayat Tamilnadu

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்வது எளிதானது என்றும், முன்பு பதவியில் இருந்தபோது தன்னால் அவ்வளவு எளிதாக செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். சமூக ஊடகங்கள் மக்களுக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது மட்டுமல்லாமல், மக்களை அதிகாரிகளுடன் இணைக்கின்றன என்று கூறினார்.