உத்தர பிரதேசத்தில் இ றந்துபோனதாக கருதப்பட்ட பெண் ஒருவர் உ யிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்தப்பெண்ணை கொலை செய்ததாக ஒருவர் மீது வ ழக்கு தொடரப்பட்டு அவர் சி றைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 7 வருட போராட்டத்துக்கு பிறகு தான் அவர் நிரபராதி என்பது தெரியவந்துள்ளது.

அலிகார் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 17 ஆக இருந்தது. அவரை தீவிரமாக தேடி வந்த போலீசாருக்கு அந்தப்பெண்ணின் சாயலில் ஒரு ச டலம் கிடைக்கவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முடிவுக்கு வந்தனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து சி றையில் அடைத்து வ ழக்கை முடித்துள்ளனர். ஆனால் தற்போது அவர் நிரபராதி என்பதை அவருடைய தாய் நிரூபித்துள்ளார்.

7 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகியிருக்கிறார். 17 வயதில் அவர் தன்னுடைய காதலனுடன் ஊரை விட்டு ஓடிப்போய் விட்டாராம். வேறு ஊரில் சென்று காதலனுடன் திருமணம் செய்துகொண்ட அந்தப்பெண் யார் கண்ணிலும் படாமல் ஏழு வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் உ யிருடன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணால் ஒருவர் கொ லைப்பழியுடன் ஜெ யிலில் 7 வருடங்களை கழித்துள்ளார் என்கிற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா பாணியில் களத்தில் இறங்கி உண்மையை கண்டுபிடித்த அந்த நிரபராதியின் தாயாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.