notification 20
Lushgreen
மருமகனை நீ, வா, போ என மரியாதை இல்லாமல் பேசும் மாமியார்களை எப்படி சமாளிப்பது?

திருமணம் செய்வதற்கு முன்னர் சி*றகடித்த பறவை போல இருந்த ஆண்கள் கல்யாணம் ஆன நாள் முதல் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருபுறம் புதுப் பொண்டாட்டி அது வேணும், இது வேணும் என்று உங்களை அன்புத் தொ*ல்லை செய்வார்கள். மறுபக்கம் நமக்கு பழக்கமில்லாத மாமியார் வீட்டில் புது உ*றவுகளுடன் ஏற்படும் நட்பு. இது புது உ*றவு என்று சொல்லக்கூடாது. கடைசி வரை தொடரும் மாமியார் மருமகன் இருவருக்கும் உண்டான புது சொந்தம்.

பழைய காலங்களில் மாமியார் மருமகனைப் பார்த்தால் பேசவே மாட்டார், வாங்க மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்னர் மருமகனைப் பார்த்தால் குனிந்த தலை நிமிராமல் இருப்பார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. மருமகன் மாமியாரைப் பார்த்தால் குனிந்த தலை நிமிராமல் இருக்கிறார். நிறைய ஊர்களில் மருமகனை நீ, வா, போ என்று மாமியார் மரியாதையை இல்லாமல் பேசுகிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டால் அந்த மருமகன் எப்படி த*ப்பிப்பது?

அவங்க ஏன் உங்களை நீ, வா, போ என்று அழைக்கிறார்கள்? ஒன்னு நீங்க அடிக்கடி அவங்க வீட்டுக்கு போறதுகூட காரணமாக இருக்கலாம். உங்கள் மாமியார் உங்களை விட பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம். அதிக அளவில் அவங்க வீட்டுக்கு போவதை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு மரியாதை தானாக தேடிவரும்.

நீங்க எப்போதாவது செல்லும் நபராக இருந்தால் அப்போதும் உங்கள் மாமியார் உங்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டால் நீங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லேன்னா உங்க மனைவியிடம் சொல்லி உங்க அம்மா இந்த மாதிரி மரியாதையை இல்லாமல் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை என்று ஓப்பனாக சொல்லிவிடுங்கள். ஏதும் செட் ஆகவில்லை என்றால் பேசாம அவங்கள அக்கான்னு கூப்பிட ஆரம்பித்துவிடுங்கள். அக்கா நம்மை நீ, வா, போ என்று சொல்வதில் எந்த மரியாதையும் தேவை இல்லைதானே.

Share This Story

Written by

Karthick View All Posts