notification 20
Misc
சில ஆண்கள் ஏன் நெஞ்சில் உள்ள உரோமத்தை நீக்கி விடுகிறார்கள்?

மீசை வைத்தால் தான் ஆம்பள என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது நாட்டில் உள்ள பாதிபேர் மீசையே இல்லாமல் முற்றிலும் வழித்துக்கொண்டுதான் அலைகிறார்கள். இந்த அளவுக்கு மீசை இல்லாமல் சுற்றுவது பேஷனாகிவிட்டது. எந்த ஒரு ஆணும் நெஞ்சில் உள்ள உரோமத்தை அவ்வளவு எளிதில் நீக்கிவிடமாட்டார்கள். நெஞ்சில் உரோமம் இருந்தால் தான் அவர் ஆண் என்று கூட சொல்வார்கள். நெஞ்சில் உள்ள உரோமத்தை வழித்து எடுக்கும் ஆண்களை அவன் ஆணே அல்ல என்றெல்லாம் சமூகத்தில் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால் சில ஆண்கள் இதற்கு நேர்மறையாக செயல்படுகிறார்கள். அதாவது நெஞ்சில் உள்ள உரோமங்களை முற்றிலும் நீக்கி விடுகிறார்கள். அதற்கு காரணம் நடிகர்கள் சினிமா துறையை சேர்ந்தவர்கள் போன்றோர் தங்கள் அழகைக் காட்டிக் கொள்வதற்காக அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடலாம். அந்த மாதிரி உடற்கட்டை காட்டினால் தான் அவர்களுக்கு அழகாக இருக்கும் என்பதற்காக நெஞ்சில் உள்ள உரோமத்தை நீக்கிக் இருக்கலாம்.

அவர்கள் கோடிகளில் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள். சில ஆண்கள் ஜிம்மிற்கு சென்று தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு நம் உடம்பை டெவலப் பண்ணி வச்சுருக்கோம். இப்படி நெஞ்சில் முடி அதிகமாகவும், அ*சிங்கமாகவும் இருக்கிறதே என்று நினைத்து சிலர் தங்கள் உரோமங்களை நீக்கி கொள்கிறார்கள்.

சிலருக்கு உடலில் ஆ*ப்ரேஷன் செய்யும் பொழுது இதயம் சம்பந்தமான உடல் சம்பந்தமான ஆ*பரேஷன் செய்யும்போது ஆபரேஷன் செய்வதற்கு முன்னர் உடலில் உள்ள உரோமங்கள் அனைத்தையும் நீக்கிவிடுவார்கள். ஒருமுறை நீக்கிவிட்டால் மீண்டும் மீண்டும் உரோமங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக சிலர் அ*சிங்கமாக இருக்கிறதே என்று நினைத்து நீக்கிவிடுவார்கள், இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் உடலிலுள்ள உரோமத்தை நீக்குவது அவரவர் தனிப்பட்ட விஷயம். இருந்தாலும் நீங்கள் நெஞ்சிலுள்ள உரோமத்தை நீக்கி இருந்தால் ஒரு 10 பேர் இருக்கும் ஒரு பொதுவான இடத்தில் நீங்கள் சட்டையைக் கழட்டினால் அங்கே உள்ள அனைவரும் நீங்கள் நெஞ்சில் உள்ள உரோமத்தை நீக்கி உள்ளீர்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதுதான் உண்மை.

Share This Story

Written by

Karthick View All Posts