ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் டிக்கட்டை இலவசமாக வழங்கலாமே என சில பேர் சொல்லறங்க. அரசு இதில் கூட லாபம் அடிக்குதேன்னு ஏசுறாங்க. நான் ஒரு உண்மை சொல்லட்டா? பிளாட்பாரம் டிக்கட் இல்லை என்றால் ரயில்வே ஸ்டேஷன் சந்தைக்கடையாகிவிடும். குடும்பத்தில் அனேகர் ஒரு பயணியை வழியனுப்ப வருவார்கள். நடைமேடையிலும் நடைமேடைக்குச் செல்லும் படிக்கட்டுகளிலும் இப்போதுள்ளதைவிட கூட்ட நெரிசல் ஏற்படும்.
வண்டி புறப்படும் ஜங்ஷன் மற்றும் வண்டி நின்று செல்லும் ஜங்ஷன்களில் பயணிகள் வந்து செல்வது மிகவும் துன்பகரமான மாறக்கூடும். இனி வரும் காலங்களில் விமான நிலையங்கள் போல பயணியை தவிர மற்றவர்கள் உள்ளே போக முடியாது என்ற நிலை வரலாம். 60 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் உடல் தகுதி குறைந்தவர்களுக்கு மட்டும் உதவியாளர் ஒருவர் இரயில் பெட்டி வரை உடன் வரும் விதமாக வருங்காலத்தில் நடைமுறையில் மாற்றம் வரலாம்.
இன்னொரு உதாரணமும் சொல்றேன். பிளாட்பார்ம் டிக்கட் முறை இல்லை என்றால், நீங்கள் ஒருவரை வழியனுப்பச் சென்று வெளியே வரீங்க. வாசலில் டிக்கட் பரிசோதகரிடம் என்ன பதில் சொல்வீர்கள்? நீங்கள் டிக்கட் எடுக்காத பயணியாக கருதப்படுவீர்கள். அந்த நேரத்தில் அங்கு இருக்கும் இரயில் புறப்பட்ட இடத்திலிருந்து வந்து சேர்ந்த ஸ்டேஷன் வரைக்குமான பயணக் கட்டணத்துடன் அதற்குரிய அபராதமும் சேர்த்து மொத்தமாக நீங்கள் செலுத்த நேரிடும். பிளாட்பார்ம் டிக்கட் எடுத்தவர்கள் அச்சமின்றி மற்ற பயணிகள் வெளியேறும் முறையான வாசல் வழியாகவே வெளியேறலாம்.