why-meena-not-act-vijay-movies-reason-revealed
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் மீனா. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன்,விஜயகாந்த், சரத்குமார், அஜித் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் சரக்கு வச்சுருக்கேன் என்னும் பாடலுக்கு மட்டும் ஜோடியாக நடனம் ஆடினார்.

why-meena-not-act-vijay-movies-reason-revealed
விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். 2000 களில் மீனா முன்னணி நடிகையாக வளம் வந்தபோது விஜய்யும் ஒரு முன்னணி நடிகராகத்தான் வளம் வந்தார். இருந்தும் விஜய்யுடன் ஒரு படத்தில் கூட மீனா நடிக்கவில்லை. நடிக்கவில்லை என்று சொல்வதை விட வாய்ப்பு கிடைத்தும் மீனா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

why-meena-not-act-vijay-movies-reason-revealed
விஜய் நடிப்பில் உருவான பிரியமுடன் மற்றும் ப்ரண்ட்ஸ் படத்தில் மீனாவை தான் முதலில் நடிக்க அணுகியுள்ளனர். அந்த நேரத்தில் மீனா பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்ததால் விஜய்யுடன் ஜோடி சேர முடியாமல் போய்விட்டது என்று அண்மையில் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் மீனா.
