ஹாலிவுட் சினிமாக்களிலும் இரட்டை வேட படங்கள் நிறைய வந்துள்ளன. இருந்தாலும் நம் இந்திய படங்கள் அளவிற்கு அதிக இரட்டை வேடப் படங்கள் ஹாலிவுட்டில் அதிக அளவு வெளியாகாது. எப்போதும் ஹாலிவுட் சினிமாவில் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் தேவைப்பட்டால் மட்டும்தான் இரட்டை வேட கதைகளை இயக்குனர்கள் எடுப்பார்கள்.
இந்த கதைக்கு இரட்டை வேடம் அவசியம் தேவை என்னும் பட்சத்தில் தான் அந்த படத்தில் இரட்டை வேடம் ஹாலிவுட்டில் இடம்பெறும். நம்ம தமிழ் படங்களில் ஒரு நடிகரை மாஸாக காட்ட வேண்டும் என்றாலும், சென்டிமெண்டாக படத்தில் காட்சிகள் இருக்க வேண்டும் என்றாலும் இரட்டை வேட கதையை இயக்குனர்கள் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அண்ணன், தம்பி கதாப்பாத்திரம், அப்பா, மகன் வேடம் என நம்ம சினிமாவில் இரட்டை வேட படங்கள் நிறைய வெளியாகின்றன. ஹாலிவுட் படங்களை ஒப்பிடும்போது நம்ம தமிழ் மொழி இரட்டை வேட படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதில்லை. வெறும் நடிகர்களின் மாஸான தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை ஓட்டுகிறார்கள். தி பிரெஸ்டிஜ், தி டபுள், லெஜெண்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் இரட்டை வேடங்கள் சிறப்பாக இருக்கும்.