notification 20
Misc
25 வயதிலேயே சிலருக்கு வெள்ளை முடி எட்டிப்பார்க்க என்ன காரணம்? ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இதை எப்படி சரி செய்யலாம்?

பழைய காலத்தில் 50 வயதான மனிதர்களுக்குக் கூட வெள்ளை முடி எட்டிப்பார்க்காது.  ஆனால் இப்போது பிறக்கும் குழந்தைகளே வெள்ளை முடியோடு பிறக்கிறார்கள். எல்லாம் நாம் பின்பற்றும் உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாம் எங்கு சென்றாலும் சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக 25 வயதை கடந்த நிறைய பேருக்கு அதிக அளவில் முடி நரைத்து விடுகிறது.

பொண்ணு பாக்க போனால் என்னப்பா முடியெல்லாம் வெள்ளையா இருக்கு, வயசு 25 தான்னு பொ*ய் சொல்றீங்களா? என்று கிண்டல் செய்கிறார்கள். இளம் வயதில் முடி வேகமாக நரைப்பதற்கு என்ன காரணம்? அதிகமாக சி*ற்றி*ன்பத்தில் ஈடுபடும் நபர்களுக்கு முடி வேகமாக நரைத்துவிடும். அதேபோல இரவு நேரங்களில் தூங்காமல் மொபைல் போன் நோண்டுபவர்களுக்கும் முடி வேகமாக நரைத்துவிடும்.

எப்போதும் வருங்காலத்தை பற்றி அதிகம் சிந்திக்கும் நபர்களுக்கும் முடி வேகமாக நரைத்துவிடும். உடல் சூடு அதிகம் உள்ள நபர்களுக்கு முடி வேகமாக நரைக்குமாம். நாம் சாப்பிடும் உணவில் சத்தான உணவு பொருட்களையும், கருவேப்பிலை நம் சாப்பாட்டில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனை சரி ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். அதேபோல  நன்றாக தூங்கினால் இந்த பிரச்சனை படிப்படியாக குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறையை தொடர்ச்சியாக பின்பற்றிவந்தால் இரண்டு வருடங்களுக்குள் கண்டிப்பாக பிரச்சனை சரி ஆகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts