ஆண்களுக்கு சட்டையின் உள்ளே ஒரே உள்ளாடை மட்டுமே. ஆனால் பெண்ணிற்கோ, மூன்றடுக்கு நிலையில் உடை அணிய வேண்டும். அதுவும் இந்த வெயில் காலத்தில், உள்ளே இருக்கும் வெப்ப அவஸ்த்தையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தட்ப வெட்பநிலைக்கு ஏற்ப பெண்களின் ஆடை தேர்வு இருக்கிறதென்றால், நல்ல காட்டன் துணியில் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் சில்க், சிந்தெடிக் வேலைபாடுகளால் தைக்கப்பட்ட ஆடைகளையே இளம்பெண்கள் விரும்புகின்றனர். தான் அழகாய் இருக்கிறோம் என்று ஒரு பெண் உணர்வது அவள் தன்னம்பிக்கையைக் கூட்டும்.
பெண்ணழகின் மிக முக்கியமாக அங்கம் நெஞ்சுப்பகுதி. அதனை அரவணைத்து அலங்கரிப்பவை ஜாக்கெட்கள். அவை எடுப்பாக இருக்க வேண்டும். கசங்கி சுருங்கி இருந்தால் ரொம்ப வயதான தோற்றத்தைத் தரும். மிக இறுக்கமான ஜாக்கெட்டும், அதே போல ரொம்ப தளர்வான ஜாக்கெட்டும் மோசமானவை. மிகவும் இறுக்கமான ஜாக்கெட், பெண்களின் நெஞ்சு பகுதிக்கு தீங்கானது. சதையை அழுத்திப்பிடித்து இரத்த ஓட்டத்தை பாதிக்கும். முதுகிலிருந்து, முன்பகுதி வரை உடலில் தழும்புகள் உண்டாகும். இது மட்டுமின்றி அதிக இறுக்கமான ஜாக்கெட், பெண்களின் நெஞ்சுப்பகுதியின் இயல்பான பலத்தை இழக்க வைக்கும்.
இளம் வயதிலேயே தொங்கிய நிலையில் காணப்படும். அதற்காக டைட்டா வேண்டாமென மிக தளர்வான ஜாக்கெட் அணிந்தால், வயதான பாட்டி கோலத்தைத் தரும். கையை தூக்கி வேலை செய்யும் போதெல்லாம், ஜாக்கெட்டின் கீழ்ப்பகுதி வழியாக அங்கம் வெளியே தெரியும். அதனால் ஆடை விஷயத்தில், ஜாக்கெட் தைக்கும் போது மட்டும் சரியான அளவை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஜாக்கெட்களை அடிக்கடி அளவு சரியாக உள்ளதா? என்பதை சரி பார்த்து உபயோகிப்பது ரொம்ப நல்லது. பொதுவாகவே எந்த இடத்தில் எந்த வகையான ஜாக்கெட் அணிவது என்பதில் பெரும்பாலான பெண்களுக்கு குழப்பம் இருக்கும்.
ஒரு சில இடங்களில், குறிப்பிட்ட வகையான ஜாக்கெட்களை அணிவதால் மற்றவர்கள் ஒரு விதமாகப் பார்ப்பார்கள். பேசவும் செய்வார்கள். ஏதாவது விழாக்களுக்கு செல்லும்போது மாடல் ஜாக்கெட்டை அணிந்து செல்லலாம். அங்கே கவர்ச்சி என்றாலும் யாரும் கேட்கப்போவதில்லை. கல்லூரிகள் போன்ற முக்கியத்துவம்வாய்ந்த இடங்களில், லைனிங் இல்லாத லேசான ஜாக்கெட்டுகளை அணியவே கூடாது. பார்ப்பவர் கண்களில் தான் தவறு உள்ளதென பெண்ணியவாத வசனம் பேசினாலும், அந்த மாதிரியான இடங்களில் உள்ள ஆண்கள், மாணவர்களின் மனநிலையை என்னைக்கும் மாற்ற முடியாது. அங்கே பார்மல் ஜாக்கெட்டுகளே நல்லது. மற்ற இடங்களில், அவரவர் உடை தேர்வு செய்யும் உரிமை அவரவற்கே. நமக்கு பிடிக்காது என்றால், நம் கவனத்தை தான் திருப்பிக்கொள்ள வேண்டும்.