notification 20
Daily News
தொழில் செய்யும் பெண்கள் எந்த மாதிரி டிரெஸ் பண்ணுவாங்க? குனியும் போதும், நிமிரும் போதும் அலை பாயும் கண்களுக்கு இதுதான் கரெக்டாம்!

தொழில் செய்யும் பெண்கள் பலருடன் கலந்து பழக வேண்டி இருக்கும். எனவே அதற்கு ஏற்ப அவர்களுடைய ஆடை தேர்வு இருக்கலாம். சுடிதார் அணிந்து செல்வது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது. ஒரு விதமான லோ-எனர்ஜியை கொடுக்கும். பெரும்பாலான பெண்களின் தேர்வாக இருப்பது புடவை தான். ஒரு பெண்ணை புடவையில் படு கவர்ச்சியாகவும் காட்ட முடியும். அழகு தேவதையாகவும் காட்ட முடியும். இந்த சினிமாவை பார்த்து நம்முடைய மனதை குப்பையாக்க வேண்டாம். 

ஆடை சுதந்திரம் இருந்தாலும், பிஸினஸ் என்று வந்தால், பார்க்கும் யாரும் முகம் சுளிக்காவண்ணம் உடை இருக்க வேண்டியது சமுதாய கடமைகளில் ஒன்று. என்னை பொருத்தமட்டில் புடவை தான் சரியாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். சேலை அணிந்து வரும் பெண்ணின் அழகும், கம்பீரமும் வார்த்தைகளில் அடங்காது. மேலும் சேலை அணிந்த பெண்ணைப் பார்த்தால் இனம் புரியாத ஒரு மரியாதையும் வருகிறது. தொழில் செய்யும் பெண்களுக்கான ஆடையில் புடவை முதல் இடம் பிடிக்கிறது.

கேஷ்வலாக உடுத்தப்படும் காட்டன் புடவை பெண்களுக்கு கம்பீரத்தைத் தரும். ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். பார்ப்பவருக்கு மரியாதை கொடுக்கத் தோன்றும். எங்கோ ஒரு பெண் தன்னிலை மறந்து உடுத்தும் உடையால், சில மனித மிருகங்களின் ஆசை தூண்டப்படுகிறது. அதனால் ஒரு பாவமும் அறியா பிஞ்சுகள் அந்த மிருகங்களின் ஆசைக்கு இரையாகிப் போகின்றனர். புடவையில் கிடைக்கின்ற கண்ணியம் வேறு எதிலும் வருவதில்லை. 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts