notification 20
Misc
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு என்ன வகையான உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்?

சரியான வயதில் திருமணம் செய்தால் எல்லாரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். கமிட்மென்ட் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து வந்தால் குழந்தை பிறப்பும் தள்ளிப்போகும். நம்ம மக்கள் எல்லோரும் பழைய மாதிரி சத்தான உணவுகளை சாப்பிடாமல் ஜங்க் உணவை சாப்பிடுவதும் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் கரு கலைவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு ரொம்ப பத்திரமாக இருக்கவேண்டும். முடிந்தவரை இந்த முதல் மூன்று மாதங்களில் உ*டலு*றவு கொள்வதை தவிர்க்க வேண்டும். சத்தான நன்றாக சமைத்த காய் கறிகளை சாப்பிட வேண்டும். கோழி, ஆடு, மீன் போன்ற மாமிசங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதம், பிஸ்தா, முந்திரி, வால்நட் தினமும் சாப்பிட வேண்டும். சுண்டல், பச்சைப்பயிறு, முருங்கை கீரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால், தயிர் போன்ற கால்சியம் உள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு வேக வைத்த முட்டையை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவது குழந்தை வளர்ச்சிக்கு நல்லது.

ம*து, ஜங்க் உணவுகளை அறவே புறக்கணிக்க வேண்டும். சர்க்கரை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. எள், பப்பாளி போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. பழங்களை பழங்களாக சாப்பிடவேண்டும். ஜூஸ் போட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சர்க்கரை பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நன்றாக வேகவைக்கப்பட்ட உணவையும், காய்கறிகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் சாப்பிடும் பெண்கள் மெர்குரி அதிகம் உள்ள மீன்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

Share This Story

Written by

Karthick View All Posts