notification 20
Misc
ஆயுள் முடியும் முன்னரே ஒருவரது உயிர் பிரிந்துவிட்டால், ஆன்மா எப்படியெல்லாம் துடிக்கும் தெரியுமா?

உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர், அந்த உடலுக்கு என்ன ஆகும் என்பதையே எல்லா ஆராய்ச்சிகளும் விளக்குகின்றதே தவிர, பிரியும் உயிர் எங்கு செல்கிறது என்பதை எந்த ஆராய்ச்சியாலும் விளக்க முடியவில்லை. இந்த இடத்தில் தான் ஆன்மீக நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது. நவீன ஆராய்ச்சி முறைகள் வருவதற்கு முன்னரே, உயிர் குறித்தும், ஆன்மா குறித்தும் அதிகம் பேசியதும், விவாதித்தும் நம் மண்தான் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். 

உயிர் உருவாகவே இன்னைக்கு தவமாய் தவமிருந்து காத்திருக்க வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் ஒரு உயிரை உருவாக்கிவிட முடியாது. பக்குவமாய் கருவறையில், உரு பெற்ற உயிரை, அற்ப விஷயத்திற்காக துறக்க வேண்டும் என்று நினைக்கும் என்னத்தை மாற்ற வேண்டும். நமக்கான விதி கட்டாயம் எழுதப்பட்டிருக்குமாம். விதி முடிவதற்கு முன்னரே நம்முடைய முயற்சியில் உயிரை துறப்பதாக இருந்தால், நமக்கான நாட்கள் முடிவடையும் வரையில் ஆன்மா சுற்றிக்கொண்டே இருக்கும்.

இயற்கையாகவோ அல்லது விதிப்படி உயிர் பிரிந்தால், உடலைவிட்டு ஆன்மா எளிதில் வெளியேறி, காற்றோடு கலந்துவிடுமாம். வற்புறுத்தி உயிர் பிரிய வைத்தாலோ அல்லது விதி முடிவடையும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டாலோ ஆன்மா உடலை விட்டு வெளியேறி, அவர்களுடைய காலம் முடிவடையும் வரையில், முன்னர் சுற்றிய இடங்களை நோக்கி செல்லுமாம். அந்த ஆன்மாவிற்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும், ஆனால் வெளிபடுத்த முடியாது.

பிடித்தவர்களை சுற்றி சுற்றி வரும், அவர்களுடன் இருந்த நினைவுகளை கனவாக நினைவுபடுத்தும். சந்தோசமான தருணங்களில் குடும்பத்தை சுற்றி சுற்றி வரும், ஆனால் நினைத்ததை அடைய முடியாது. இறுதிநாட்கள் நெருங்கும் வரையில் இப்படி சுற்றித்திரியும் ஆன்மா, ஆயுள் முடிந்த பிறகே உலகைவிட்டு வெளியேறுமாம். அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்டு ஆன்மாவாக மறி, அனுபவிக்க முடியாததை நினைத்து கஷ்டப்படுவதற்கு, இருப்பதை சமாளித்து சென்றால், ஒரு நாள் நமக்கானதாக மாறும் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.  

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts