notification 20
Timeless
பெண்ணின் இடுப்பில் தங்கம் சேரும்போது, கணவரை வசியப்படுத்தும் சூத்திரம் பிறக்கும்! தொப்பையை குறைக்க ராஜகுமாரிகள் பயன்படுத்திய ரகசிய ஆபரணம்!

பொதுவாக தங்கம் என்பது மகாலட்சுமியின் உருவமாக கருதப்படுகிறது. அதனால் தான் ஒவ்வொரு நகைக்கடையில் மகாலட்சுமியின் தெய்வீக சிலை இருக்கும். அந்த காலம் முதலாகவே தங்கத்தை தங்களது குடும்பத்தின் கவுரவத்தை காட்டவும், மரியாதைக்குரிய ஒரு பொருளாகவும் கருதி வருகின்றனர். முக்கியமாக வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் ஒரு குண்டு மணியாவது தங்கம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பழக்கம் இப்பொழுதும் உள்ளது. எவ்வளவு தான் மாடர்ன் குடும்பமாக இருந்தாலும் பிறந்த பெண் பிள்ளைக்கு கட்டாயம் தங்க நகை வாங்குவார்கள்.

எப்பொழுது தங்கம் வாங்கினாலும் அதை கடவுளிடம் வைத்து பூஜை செய்து, கடவுளுக்கு அணிந்துவிட்டு பிறகு அதை வாங்கி உபயோகித்தால் மிகவும் நல்லதாம். அப்பொழுது தான் அந்த நகை நீண்ட காலம் உங்களிடம் ஒட்டியே இருக்கும். இல்லையெனில் வங்கிகளில் பாடம் படிக்க சென்றுவிடும் என்பார்கள்.

இதை தான் தெய்வத்தின் அருள் எப்பொழுதும் வேண்டும் என்று சொல்லுவார்கள். அதேபோல், திருமணத்தின் போது கணவன் எத்தனை பவுனில் மனைவிக்கு தாலி செய்து கொடுக்கிறானோ அந்த அளவுக்கு மணமகனின் மீதும் மணமகன் வீட்டார் மீது அன்பும் பாசமும் இருக்கும். இவ்வாறு தங்கம் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விஷயம் மட்டும் அல்ல, அவளுடைய கணவன் மற்றும் உறவினர்களின் அன்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. அதற்காக தங்கம் கொடுத்தால் தான் பாசம் என்று சொல்லவில்லை. தங்கத்தின் மூலமாகவும் பாசம் வெளிக்காட்டப்படுகிறது என்று கூறுகிறேன். தவறாகவே இருந்தாலும் கூட ஒரு விஷயம் சொல்கிறேன் எல்லோரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். பெண்ணிற்கு எத்தனை பவுன் போட்டார்கள் என்பதை விசாரித்து, அதிக பவுன் என்றால் தான் ஒரு சில குடும்பத்தில் அந்த பெண்ணிற்கு புகுந்த வீட்டில் மரியாதையே கிடைக்கும். உண்மையா இல்லையா? 

இந்த தங்கத்தை பெண்கள் எங்கெல்லாம் அணியலாம்? இடுப்பிற்கு மேல் எப்படி வேண்டுமானாலும் நகை செய்து அணியலாம். ஆனால் இடுப்பிற்கு கீழ் அணியக்கூடாது. உதாரணமாக மெட்டி, கொலுசு போன்றவற்றை தங்கத்தில் அணிதல் கூடாது. மாறாக இடுப்பிற்கு மேல் தோடு, மோதிரம், செயின், வளையல், ஒட்டியாணம், அரைஞாண் போன்றவற்றை அழகாக தங்கத்தில் செய்து அணியலாம். அடுத்து முக்கியமான ஒரு விஷயம் சொல்கிறேன். இந்த காலத்து பெண்கள் அரைஞாண் அணியவே கூச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரைஞாண் அணிந்தால் எவ்வளவு நன்மை என தெரிந்துகொண்டால், கண்டிப்பாக அரைஞாண் கயிற்றை விரும்பி அணிய ஆரம்பித்துவிடுவார்கள். இடுப்பில் அரைஞாண் கட்டும்போது, இடை அழகு கூடும். இடுப்பு உடுக்கை போல மாறும். இடுப்பு கொ ழுப்பை குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை கட்டுப்படுத்தும். முக்கியமாக அரைஞாண் கயிறை தங்கத்தில் செய்து அணியும்போது, உங்கள் கணவரின் பார்வையை இடுப்பில் இருந்து விலக்க முடியாமல் போகலாம்! 

Share This Story

Written by

AP View All Posts