undefined
நடிகர் அஜித் ஸ்டைலிஷான மனிதராக சினிமாவில் வளம் வருகிறார் என்றால் அதற்கு அடிக்கல் நாட்டியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். பில்லா படத்தில் தொடங்கி ஆரம்பம், பில்லா 2 என தொடர்ந்து அஜித்தை ஒரு ஸ்டைலிஷ் நடிகராக திரையில் காட்டியவர் தான் இந்த விஷ்ணு வரதன்.

vishnu-reject-ajith
2015ஆம் ஆண்டு அஜித்துக்காக ஒரு கதை ரெடி பண்ணி அந்த கதையை அஜித்திடம் சொல்லி இருக்கிறார். அஜித்துக்கும் அந்த கதை பிடித்துப்போகவே அந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சில ப்ராஜெக்ட் முடிச்சுட்டு வந்தர்றேன் என 4 வருடங்கள் வரை விஷ்ணு வரதனை அஜித் வெயிட் பண்ண சொல்லி இருக்கிறார். கடைசி வரை அஜித்திடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் தன்னுடைய வாழ்க்கையில் 4 வருடங்கள் வீணாகப்போய்விட்டதே என்று நினைத்து பாலிவுட் பக்கம் படம் பண்ண சென்றுவிட்டார் விஷ்ணு வரதன்.

vishnu-reject-ajith
பாலிவுட் திரையுலகமும் இவரின் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தவுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் விஷ்ணு வரதன். இந்நிலையில் அஜித் குமார் நடிக்கும் AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மீண்டும் விஷ்ணு வரதனுக்கு சென்றுள்ளது. நம்முடைய இயக்குனர் நமக்காக நல்ல கதை வச்சுருப்பார், அந்த படத்துல நடிச்சுக்கலாம் என்று அஜித் விஷ்ணு வரதன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.

vishnu-reject-ajith
ஆனால் அஜித் பட வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்று விஷ்ணு வரதன் தெரிவித்துள்ளார். 4 வருசம் என் வாழ்க்கையில் வீணாப்போனதே அவரால தான், அதனால எனக்கு அந்த பட வாய்ப்பு வேண்டாம், நீங்க வேறொரு இயக்குனரை வச்சு அந்த படத்தை பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டார் விஷ்ணு வரதன். இதன் காரணமாகத்தான் அஜித் 62 படத்தின் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றது என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.
