vilupuram-panrutti-velur-love-incident-fb
பண்ருட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ். வயது 24. இவர் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வாழ்ந்துவருகிறார். முகநூலில் அதிக நேரம் மூழ்கிக்கிடக்கும் நபர் தான் இந்த அருள்ராஜ். இவருக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஹாலக்ஷ்மி என்னும் பெண்ணுடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை, நான் ஒரு அனாதை என்று சொல்லி அருள்ராஜுடன் மஹாலட்சுமி பழகி இருக்கிறார்.

vilupuram-panrutti-velur-love-incident-fb
சில நாட்களுக்கு பிறகு நட்பு காதலாகி இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தன்னுடைய தோழிக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், கொஞ்சம் பணம் கொடுங்க என்று சொல்லி அருள்ராஜிடம் 6 பவுன் நகை மட்டும் 83000 பணம் வாங்கி சென்றுள்ளார். சென்னை சென்ற பிறகு மஹாலஷ்மியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

vilupuram-panrutti-velur-love-incident-fb
கணவர் அருள்ராஜ் போன் பண்ணி பேசியபோது சரியான பதிலளிக்காமல் போனை கட் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருள்ராஜ் சென்னை கிளம்பி அந்த பெண்ணின் தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த அட்ரஸ் பொய் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பெண் ஏற்கனவே 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
