notification 20
Lushgreen
காசு குடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா? விஜய் சேதுபதியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் விஜய் சேதுபதி. எங்க பாத்தாலும் அவர் மூஞ்சி தான் தெரியுது என்று யோசிக்கும் அளவிற்கு அவர் சம்மந்தமான படங்களும், செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதுவும் வாரத்துக்கு 2, 3 படங்களை திரையங்குகளிலும், OTT தளத்திலும் வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சன் டிவியில் இவர் நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படம் வெளியானது. அதே நாளில் OTT தளத்தில் லாபம் படமும் வெளியானது. ரெண்டுமே பார்ப்பவர்களை எ*ரிச்சல் அடைய வைக்கும் விதத்தில் இருந்தது. இதுமட்டுமில்லாமல் டிவியில் ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னபெல்லே சேதுபதி என்னும் படம் திரையங்குகளில் வெளியானது. படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் ஹாரர் காமெடி பாணியில் இருக்கும் என்று நினைத்து ரசிகர்கள் OTTயில் பார்த்தார்கள்.

கடந்த 2, 3 வருடங்களில் வெளிவந்த மிகச்சிறந்த குப்பை படம் இதுதான் என்று படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர். படத்தில் ஹாரரும் இல்லை, காமெடியும் இல்லை. எதுக்குடா இந்த படத்தை எடுத்து வச்சுருக்கீங்க என்று பார்ப்பவர்கள் நினைக்கும் படி படம் அமைந்துவிட்டது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா படம் முடியும்போது பார்ட் 2 வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

ஐய்யோ முதல் பாகத்தையே பாக்க முடியல, இதுல பார்ட் 2 வேறயா என எல்லோரும் ஷாக் ஆகி விட்டனர். காசு குடுத்தா எப்படி வேணும்னாலும் நடிக்கலாம் என்கிற எண்ணம் விஜய் சேதுபதிக்கு வந்துவிட்டது, கதை நல்லா இருக்கா இல்லையா என்று பார்க்காமல் சம்பளம் கிடைக்குதா சரி படத்துல நடிச்சிருவோம் என்று தொடர்ந்து விஜய் சேதுபதி மொக்க படங்களில் நடித்து வருகிறார். இப்படியே போனால் தமிழ் சினிமாவில் காணாமல் போய்விடுவார் என்று சினிமா வட்டாரங்களில் விஜய் சேதுபதி கிசுகிசுக்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts