Daily News

பனையூர் மீட்டிங்கால் விஜய்க்கு வைக்கப்பட்ட புது செக்! இப்படி விஜய் மாட்டிக்குவாருன்னு யாருமே எதிர்பாக்கல!

Nov 24 2022 11:24:00 AM

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

vijay-paniyur-meeting-car-glass-issue

வாரிசு படத்தை தெலுங்கில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மறுபுறம் வாரிசு படத்துடன் வெளியாகும் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளில் ரெட் ஜெயண்ட் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். எனவே வாரிசு படத்தை விஜய்யின் உறவினரான seven screen studioவை வைத்து விஜய் வெளியிட போகிறார்.

vijay-paniyur-meeting-car-glass-issue

விஜய் தனது ரசிகர்களை கடைசியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் பனையூரில் உள்ள தன்னுடைய பங்களாவிற்கு தனது ரசிகர்களை வரவழைத்து பிரியாணி விருந்து போட்டார். அப்போது விஜய் வந்த காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது விஜய் சென்ற காரின் கண்ணாடியில்  கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

vijay-paniyur-meeting-car-glass-issue