Daily News

கருப்பு ஸ்டிக்கரால் விஜய்க்கு வந்த வினை! ஸ்பாட் ஃபைன் விதித்த போலீசார்! சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விஜய் மறந்துட்டாரோ?

Nov 24 2022 07:10:00 AM

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் விஜய் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸாவது தொடர்பாக சில பிரச்சனைகள் வந்துகொண்டிருக்க மறுபுறம் விஜய்க்கு மற்றொரு பிரச்சனை வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்திக்க சென்ற போது தான் வம்பில் சிக்கியுள்ளார் நடிகர் விஜய்.

actor vijay 500 rupees fine sunfilm window tint

விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்திருந்தார் விஜய். அந்தக்காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

actor vijay 500 rupees fine sunfilm window tint

போக்குவரத்து விதிகளின் படி காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது குற்றமாகும். காரின் உள்ளே யார் இருக்கின்றனர் என்பது வெளியில் தெரியும் வகையில் கண்ணாடி மற்றும் ஸ்டிக்கர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. இருப்பினும் பிரபலங்கள் பலரும் தங்களைச்சுற்றி மக்கள் கூட்டம் கூடிவிடக்கூடாது என்பதற்காக கருப்பு நிற ஸ்டிக்கர்களை காரின் விண்டோவில் ஒட்டிவிடுகின்றனர். தற்போது அந்த கு ற்றத்துக்காகத்தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

actor vijay 500 rupees fine sunfilm window tint

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். விஜய் விதிகளை மீறி செயல்பட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.