சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்திய இரண்டாம் ரக பொருட்களை விற்கும் சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு நிறைய மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

சென்னை பல்லாவரம் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே கழட்டி விட்டிருந்த செருப்பை சிலர் திருடி சென்றுள்ளனர். அந்த பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த பகுதியில் இருந்த CCTV கேமராவை சோதனை செய்து பார்த்தபோது இரவு நேரத்தில் அரை நி*ர்வாண உடலுடன் சில வடமாநில இளைஞர்கள் செருப்பு திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பல்லாவரம் பகுதியில் இருந்த பேக்கரியில் வேலை செய்த ராகேஷ் குமார் மற்றும் லோகேஷ் குமார் என்ற வடமாநில இளைஞர்கள் தான் இந்த வேலையை செய்தனர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 300க்கும் மேற்பட்ட செருப்புகளை திருடிய இவர்கள் பல்லாவரம் வார சந்தையில் விற்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.
