அமெரிக்காவை சேர்ந்தவர் பேட்ரிசியா. இவருக்கு 64 வயதாகிறது. தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். பாண்டிச்சேரியில் 3 நாள் தங்கி இருந்தார். அங்குள்ள கலைப்பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் மேக்ராஜ்பட் உடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு 33 வயதாகிறது. இருவரும் செல்போன் எண் பரிமாறிக்கொண்டனர். நட்பு இன்னும் ஆழமானது. இருவரும் ஹோட்டலில் சந்திக்க திட்டமிட்டனர்.
பேட்ரிசியா தங்கிய ஹோட்டலுக்கு மேக்ராஜ் சென்றார். இருவரும் உணவருந்தினர். பின்னர் இருவரும் அறைக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மேக்ராஜ் ஆக்ரோஷமாக முயற்சித்ததாக கூறப்படுகிறது. நிறுத்தும்படி பேட்ரிசியா செல்லியும் மேக்ராஜ் உறவு கொண்டார். மறுநாள் காலை வலித்ததால் மருத்துவமனை அழைத்துச்செல்லும்படி பேட்ரிசியா கூறியுள்ளார். மேக்ராஜ் வரமறுத்துவிட்டார்.
இதனால் பேட்ரிசியா ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது உறுப்பில் காயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜிப்மர் டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதனை அடுத்து போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தப்பிய ஓடிய மேக்ராஜ் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.