பிக்பாஸ் மாதிரியான பெரிய பெரிய ஷோவில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், வழக்கதிற்கு மாறாக ஏதாவது கிறுக்குத்தானம் செய்யணும் போலிருக்கு. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட ஜூலியை வீரத்தமிழச்சியாக மீடியா காட்டினாங்க. பிக்பாஸ் ஷோவுக்கு தேர்வாகி உள்ளே போனதும், அவங்க வீரம் என்னவென்பது அப்பட்டமாக தெரிந்தது. அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணனை உள்ளே கொண்டு வந்தாங்க.
இப்படி ஏதாவது வித்தை காட்டி மீடியா வெளிச்சம் ஒருவர் மீது பட்டுக்கொண்டே இருந்தால் தான், அவங்க பப்ளிசிட்டியை வைத்து ஒரு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-யை எகிற வைக்க முடியும். இந்த நிலை தமிழ் டீவி ஷோ-க்களுக்கு மட்டுமல்ல. எல்லா மொழியிலும் இப்படித்தான் நடக்குது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் Hotstar OTT தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகுற மாதிரி, இந்தியிலும் பண்றாங்க. அந்த ஷோ-வில் டீவி சீரியல்களில் நடித்த உர்ஃபி ஜாவேத் என்ற பெண்ணை உள்ளே கொண்டு வந்திருக்காங்க.
அவங்க பெரிய பிரபலம் எல்லாம் கிடையாது. 5 வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு சில சீரியலில் நடிச்சாங்களாம். பிறகு யாருமே கண்டுக்கல. உடனே பிரபலமடைய என்ன செய்யலாம் என்று யோசிச்ச அவங்க. வித விதமான நகைகளை மட்டுமே உடலில் அணிந்துகொண்டு போஸ் கொடுத்து இருக்காங்க. அது நல்லா வைரல் ஆன உடனே, புதுசு புதுசா அதுமாதிரியான போட்டோ ஷூட் காட்சிகளை வெளியிட்டு, பிக்பாஸ் ஷோ உள்ளே போகும் அளவுக்கு பிரபலமானாங்க. அங்கே எப்படி நடந்துக்கணுமென்று தெரியாமல் ஒரே வாரத்தில் எலிமினேட்டாகி வெளியே வந்துட்டாங்க.
View this post on Instagram
இன்னமும் கை பரபரன்னு இருக்கும் போலிருக்கு. உடம்பின் மேல், பின்புறம் ஆடை எதுவும் அணியாமல், வெறும் சங்கிலி மட்டுமே கழுத்தை சுற்றி அணிந்த போட்டோ எடுத்து போட்டு, இளசுகளின் சூட்டை கிளப்பி இருக்காங்க. உடம்பில் டிரெஸ் எங்கேன்னு பார்த்தா, சின்னதா கறுப்பு நிற பாவாடை மட்டும் இருந்தது. அந்த உடைக்கு ஏற்றார்போல் வெள்ளை ஹை ஹீல்ஸ், ப்ளஷ் நிற மேக்கப்புடன் ஜொலித்துள்ளார். இப்படி உடம்பை காட்டிக்காட்டியே இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் பேரை பின்தொடர வைத்து, நானும் பெரிய பிரபலம் தான்னு சொல்றாங்க. பிழைப்பை ஓட்ட எப்படியெல்லாம் காலம் தள்ள வேண்டி இருக்கு பாருங்க. செயின் போட்டதில் கழுத்தே புண்ணாகிப்போச்சு!