தாஜ்மஹால் ஒரு உன்னதமான காதல் சின்னம் என்பது பச்ச புள்ளைக்கு கூட தெரியும். அதன் அழகிய வேலைப்பாடுகள் காரணமாக 350 ஆண்டுகளை கடந்தும் உலக அதிசயங்களில் ஒன்றாக மிளிர்ந்து வருகிறது. மனைவிக்காக ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினார் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் ஷாஜகான் மும்தாஜை திருமணம் செய்வதற்கு முன்பே ஏகப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல் ஆகும்.
அரசர்களுக்கு எப்போதும் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு மனைவிகள் இருப்பாங்க. வரலாற்றில் ஒரு சில மன்னர்களை தவிர மீதி உள்ள மன்னர்கள் அனைவருக்கும் இந்த வாக்கியம் கட்டாயம் பொருந்தும். பக்கத்து ஊர் அல்லது நாடு என எங்கு சென்றாலும் அங்கு தங்கள் மனம் கவர்ந்த பெண்களை அரசர்கள் திருமணம் செய்து கொள்வர். அதேபோல எதிரிநாட்டு இளவரசிகளை திருமணம் செய்து சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதும் ஒரு வழக்கம்.
முகலாய சாம்ராஜ்யத்தில் பிறந்த ஷாஜகானுக்கும் ஏகப்பட்ட மனைவிகள் இருக்கின்றனர். இஷ்டத்துக்கு பல பெண்களை மணந்து கொண்டாலும் ஷாஜகானின் உள்ளம் கவர்ந்த ஒரே மனைவி மும்தாஜ் மட்டுமே. இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 14 வாரிசுகள். அதில் குறிப்பிடத்தக்க ஒரு வாரிசு தான் நம்ம அவுரங்கசீப். 14வது குழந்தை பிறக்கும் போது தான் மும்தாஜ் தன்னுடைய உ யிரை விட்டுள்ளார். மும்தாஜ் இ றந்த இடம் ஆக்ரா கிடையாது. புர்கான்பூர் என்ற இடத்தில் தான் அவருக்கு 14வது குழந்தை பிறந்தது. அவர் இ றந்ததும் அங்கு தான். அவர் முதலில் அங்கு தான் பு தைக்கப்பட்டார்.
மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் அவருக்காக ஒரு அழகிய சமாதியை கட்ட நினைத்த ஷாஜகான் அதற்காக உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து விலையுர்ந்த பொருட்களை கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்ட துவங்கினார். சுமார் 22 வருடங்களில் தாஜ்மஹால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் கட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் புர்கான்பூரில் இருந்து அவரது உ டல் தோண்டி எடுக்கப்பட்டு ஒரு தங்கப்பெட்டிக்குள் வைத்து ஆக்ராவுக்கு அருகில் பு தைக்கப்பட்டது. பிறகு 22 ஆண்டுகள் கழித்து தாஜ்மஹால் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பிறகு மீண்டும் அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு தாஜ்மஹாலுக்குள் பு தைக்கப்பட்டது. கணக்குப்படி பார்த்தால் மூன்றாவது முறை தான் தாஜ்மஹாலுக்குள் மும்தாஜின் உ டல் பு தைக்கப்பட்டுள்ளது.
மனைவியின் சமாதியை சுற்றி பல விலையுர்ந்த பொக்கிஷங்களை ஷாஜகான் வைத்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் கொ ள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் கட்டிடக்கலையை பார்த்து வியந்த ஆங்கிலேயர்கள் தாஜ்மஹாலை பராமரிக்க நிறைய பணத்தை செலவு செய்தார்களாம். இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் கடைசியில் மாமன்னர் ஷாஜகானையும் தனக்குள் இழுத்துக்கொண்டது.
தாஜ்மஹாலுக்குள் ஷாஜகான் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் மட்டும் அப்படியே இருந்திருந்தால் அமெரிக்காவை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வல்லரசாக இந்தியா மாறியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. எல்லாத்தையும் சுரண்டிட்டு தாஜ்மஹாலை மட்டும் அப்படியே விட்டுட்டு போய்ட்டாங்க. தூக்கிட்டு போகுற மாதிரி வசதி இருந்திருந்தால் இதையும் சேர்த்து ஆட்டையை போட்டிருப்பாங்க போல. தாஜ்மஹால் குறித்து வெளியுலகுக்கு தெரியாத தகவல் வேறு ஏதேனும் இருந்தால் அதை கமெண்ட் பண்ணுங்க.