Daily News

UGC வெளியிட்ட புது உத்தரவு! திடீர் செலவை சமாளிக்க வேண்டிய கட்டாயம்! கல்லூரி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Sep 19 2022 08:19:00 AM

UGC என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழு இன்று ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மூலம் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்களங்களுக்கு ஒரு திடீர் செலவு ஏற்படவுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்களங்களில் கட்டாயம் CCTV கேமரா பொருத்த வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இதை இப்போது உடனடியாக அமல்படுத்த காரணம் ராக்கிங் பிரச்சனை தான். கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் ராக்கிங் பிரச்சனைகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் யோசனை.

UGC ragging problem CCTV camera all institutions

ராக்கிங் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ள UGC ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.