உகாண்டா ஆப்ரிக்காவின் மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகளில் கென்யா, சூடான், காங்கோ மற்றும் தன்சனியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கொண்ட நாடுகளில் உகண்டாவும் ஒன்றாக உள்ளது. உகாண்டா நாட்டை பற்றி பலரும் அறிந்திராத சில தகவல்களை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலம் மற்றும் ஸ்வாஹிலி இந்த நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தாலும் லுகான்டா என்கிற மொழி தான் இந்த நாட்டிலுள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது. உகாண்டா மக்கள் பெரும்பாலும் சாப்பிடும் உணவு வகைகள் சப்பாத்தி, Matooke எனப்படும் பச்சை வாழை, பிரட்டில் தயாரிக்கப்படும் சில உணவுகள், Stew என சொல்லப்படும் இறைச்சி ஆகியவையாகும். பூச்சி உணவுகள் கூட இந்த நாட்டில் பிரபலமாக உள்ளது. இந்த நாட்டில் street food என்று இருப்பதெல்லாம் பூச்சி உணவுகள் தான். இது தவிர மீன் உணவுகளும் உகாண்டாவில் பிரபலமாக இருக்கிறது.
உகாண்டாவில் சராசரியாக 25-29°C வரை வெப்பம் நிலவுகிறது. நம் ஊரில் பணத்தை ரூபாய் என்று அழைக்கிறோம். உகாண்டாவில் பணத்தை ஷில்லிங் என குறிப்பிடுகின்றனர். உகாண்டாவின் பண மதிப்பு இந்தியாவுடன் ஒப்பிடும்போது 54 மடங்கு குறைவாகும். அமெரிக்காவின் டாலரோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு அமெரிக்கா டாலருடைய மதிப்பு உகாண்டாவில் 3755 செல்லிங் என்ற அளவில் உள்ளது.
உகாண்டாவில் டாக்சிகள் பயன்பாடு அதிகமாக உள்ளது. உள்ளூரில் வசிக்கும் மக்களின் முக்கிய போக்குவரத்துக்கு சைக்கிள் தான் உதவுகிறது. இங்கிருக்கும் பேருந்துகளில் நீங்கள் எங்கிருந்து கை காட்டினாலும் உங்களை பேருந்தில் ஏற்றிக்கொள்வார்கள்.
உகாண்டா நாட்டில் எண்டபா என்ற பகுதியில் மட்டுமே சர்வதேச விமான போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து மேலும் மூன்று இடங்களில் உள்ளூர் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. உகாண்டா மக்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக உள்ள காரணத்தினால் குத்துச்சண்டை போட்டியில் நிறைய ஒலிம்பிக் மெடல்களை வாங்கியுள்ளனர்.