Daily News

குழந்தைகள், முதியோர்கள் திருப்பதி பயணத்தை தவிர்க்கவும்: தேவஸ்தானம் இப்படி சொல்ல என்ன காரணம்? வெளியான தகவல்!

Aug 10 2022 04:52:00 PM

இனி வரும் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகள் அக்டோபர் வரை திருப்பதி கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வேண்டுகோள் விடுத்துள்ளது.

TTD Tirumala Tirupati Devasthanam Tirupati

இந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் தங்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

TTD Tirumala Tirupati Devasthanam Tirupati

ஆகஸ்ட் 19ம் தேதி வரை திருவிழாவும், செப்டம்பர் 18ம் தேதி புரட்டாசி திருவிழாவும் துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அக்டோபர் மாதம் வரை கூட்டல் நெரிசல் மிகுந்தே இருக்கும். அதுவரை திருப்பதி பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.