notification 20
Highrise
இவங்களுக்கு மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுது பாருங்க! கடன்காரன்கிட்ட இருந்து கூட இனிமே ஈஸியா தப்பிச்சிடலாம் போலிருக்கே!

அமெரிக்காவில் சிலர் வித்தியாசமான வீடுகளை வடிவமைத்து குழந்தைகள் பள்ளிக்கு புத்தகப்பை எடுத்துச்செல்வது போல தற்போது வீடுகளையும் சாதாரணமாக எடுத்துச்சென்று வருகின்றனர். அங்குள்ள கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் என்ற நகரம் ஒன்று உள்ளது. கூடவே எடுத்துச்செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வீடுகளை இந்த நகரத்தில் அதிகமாக காணலாம்.

16 Types Of Tiny Mobile Homes – Which Nomadic Living Space Would You  Choose? – Critical Cactus

இந்த வீடுகளுக்கு டம்பிள்வீட் பிராண்டு சைப்ரஸ் 24 என்ற பெயரை வைத்துள்ளார்கள். இந்த வீடுகள் 100 முதல் 1000 சதுர அடி வரை கிடைக்கின்றன. அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாட்டில் எளிமையாக வாழ விரும்பும் மக்களுக்கு ஏற்றதாக இந்த வீடுகள் இருக்கும் என்று இதை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் நிலம் வாங்கி பிறகு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி அதன் பிறகு வங்கிக்கடனை கட்ட முடியாமல் திணற வேண்டிய நிலைமை இந்த வீடுகளை வாங்குவோருக்கு கிடையாது.

ProtoHaus Trailer Home Design from Ann Holley and Darren Macca, Eco Homes |  Eco house, Tiny house trailer, House on wheels

உங்களுடைய காரின் பின்னால் இந்த வீட்டை எளிதாக மாட்டிக்கொண்டு உங்களுக்கு வேண்டிய இடத்தில் கொண்டு போய் நிறுத்திக்கொள்ளலாம். குறிப்பாக இளசுகளுக்கு ஏற்றதாக இந்த மொபைல் வீடு கருதப்படுகிறது. சுற்றுலா செல்பவர்களுக்கும் ஏற்றதாக இந்த மொபைல் வீடு இருக்கிறது. போகும் வழியில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு தேவைப்படும் போது மீண்டும் பயணத்தை தொடரலாம்.

Cool tiny portable homes for sale with tiny portable houses for sale  amazing 27 small portable house to | Small house, Tiny house nation, Tiny  house

இந்த மொபைல் வீட்டில் 3 முதல் 5 நபர்கள் வரை தங்க முடியும். இந்த வீட்டில் சமையலறை, படுக்கையறை, பாத்ரூம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. எங்காவது போகும் போது சமையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டால் போதும். எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் எங்கு வேண்டுமானாலும் இந்த வீட்டை எடுத்துக்கொண்டு போய் வாழ முடியும்.

Small Space Living

 

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts