முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருவது புதியது அல்ல. திரைத்துறையில் இருந்த பல முக்கிய நபர்கள் நாட்டை திறம்பட ஆளும் வல்லமை கொண்டவர்களாக இருந்துள்ளதை மக்கள் கண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவும் கொடுத்து இருக்கிறார்கள். இதனால் ஒரு காலகட்டத்துக்கு மேல் உச்ச நட்சத்திரங்கள் அரசியல் பிரவேசத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதில் வெற்றியை சுவைத்தவர்களும் உண்டு, பெயரை கெடுத்துக்கொண்டவர்களும் உண்டு. அந்த வரிசையில் தற்போது ஒரு முக்கிய பிரபலம் மீண்டும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இந்த உச்ச நட்சத்திர நடிகர் சமீப காலமாக நிம்மதியற்ற மனநிலைமையில் இருந்து வருகிறராம். இதனை அவரே ஒரு நிகழ்ச்சியிலும் தெரிவித்தும் இருக்கிறார். எவ்வளவு பணம், புகழ், மனிதர்களை சம்பாதித்தாலும் மனம் மட்டும் நிம்மதியடையாமல் இருக்கிறது என்று கூறி இருந்தார். அதற்க்கு கரணம் தற்போது தெரிந்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் டெல்லியில் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள உச்ச நட்சத்திர நடிகர் அழைக்கப்பட்டு இருக்கிறார். அந்த கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் சில முக்கிய முடிவுகளை கட்சி நிர்வாகம் உச்ச நட்சத்திர நடிகர் மீது வைத்து இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தமிழகம் திரும்பியதும் முக்கிய நபரை சந்தித்து அரசியல் குறித்து கலந்துரையாடியதாக கூறி இருக்கிறார் உச்ச நட்சத்திரம்.

ஏற்கனவே பல முறை அரசியலுக்கு வருவதாக கூறி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடும் நடிகர் தற்போது தீவிரமாக இந்த விஷயத்தில் இறங்கி இருக்கிறாராம். "தனியா கட்சி ஆரம்பிக்க மாட்டேன்னுதான் சொன்னேன், அவங்க கூட சேரமாட்டேன்னு சொல்லலையே"ன்னு கூட அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.