Daily News

குப்பைமேட்டில் மலைபோல் குவிந்து கிடக்கும் தக்காளிகள்! வியாபாரம் செய்ய முடியாமல் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம்! க தறும் தக்காளி வியாபாரிகள்!

Aug 10 2022 11:51:00 AM

தமிழ்நாட்டில் ஆடி மாதம் நன்றாக மழை பெய்யும். இந்தக்காலகட்டத்தில் காய்கறிகளை கூட ஒன்றிரண்டு நாட்களுக்கு வைத்திருந்து வியாபாரம் செய்ய முடியும். ஆனால் தக்காளியை சேமித்து வைத்து விற்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலை சமாளிக்க முடியாமல் தான் தக்காளியை டன் கணக்கில் குப்பையில் கொட்டுவிட்டு செல்கின்றனர் கோவை மாவட்ட வியாபாரிகள்.

tomato waste coimbatore market tamilnadu

கோவையில் தற்போது நல்ல மழை பெய்து வருவதால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தேவைக்கு அதிகமாக லோடு வந்து இறங்கியதால் ஒரு கிலோ தக்காளி 5 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை மிகவும் குறைவாக உள்ளதால் வருகிற லோடு மொத்தமும் விற்பனையாகாமல் டன் கணக்கில் மீந்துபோகிறதாம்.

tomato waste coimbatore market tamilnadu

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவு கொட்டும் பகுதியில் தக்காளி மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. விலை சரிவு காரணமாக மீதமான தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டுப்போகும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த அவலம் அரங்கேறுவதை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர் மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள்.

tomato waste coimbatore market tamilnadu

இதுகுறித்து பேசிய வியாபாரி ஒருவர், கஷ்டப்பட்டு அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கும் விவசாயிகளை நினைத்தால் எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்கள் கண் முன்னாடியே டன் கணக்கில் தக்காளிகளை குப்பையில் கொட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு இதைவிட்டால் வேறு வழி தெரியவில்லை. மீதமான தக்காளிகளை எதுவுமே செய்ய முடியாது என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

tomato waste coimbatore market tamilnadu

தக்காளி விலை சரிவை சந்திக்கும் போதெல்லாம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தக்கொடுமை தான் அரங்கேறுகிறது. இதை தவிர்க்க என்ன வழி இருக்கிறதென்பதை அரசு தான் ஆராய வேண்டும்.