notification 20
Rainforest
மேலை நாட்டினர் டாய்லெட் போனால், ஏன் கழுவுவதில்லை? உலகமே இந்தியாவை புகழ இப்படியொரு காரணமும் இருக்கா? அவங்களுக்கு கடைசி வரைக்கும் காகிதம் தான்!

வெளிநாட்டினர் ஒண்ணு செய்யிறாங்கன்னா, நாமளும் அதையே செய்ய வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. எப்படியோ, பார்த்து பார்த்து காப்பி அடித்து வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கும் பழக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிட்டனர். இன்னும் ஆய் போனதும், பேப்பரில் துடைக்கும் பழக்கம் மட்டும் தான் வராமல் இருக்கு. கூடிய விரைவில் அதையும் கொண்டு வந்துருவாங்க போலிருக்கு. அவங்க அப்படி செய்யிறாங்க, நாம் ஏன் இப்படி இருக்கோம் என யோசிக்காமல், நம்மள மாதிரி ஏன் அவங்க இல்லைன்னு யோசிச்சு பாருங்க. நம்ம பழக்க வழக்கம் பெரிதாக தெரியும். 

டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவது நம்ம ஊருக்கு செட் ஆகாது. இங்கே கார சாரமா சாப்பிடுவோம். கண்டதையும் அடிச்சு சமைச்சு லாவகமாக தின்று முடிப்போம். இந்த உணவு முறைக்கு பேப்பர் வைத்து துடைத்தால், எரிச்சல் எல்லா இடங்களிலும் பரவி, அதனாலே ஒரு இன்பெக்சன் வரலாம். ஆனால் மேலை நாட்டினர் உணவு முறை அப்படிக்கிடையாது. குளிரான சூழலுக்கு ஏற்ற உணவை சாப்பிடுவாங்க. வெளியேறுவதும் அதே மாதிரி பதமா போகும். அவங்களுக்கு வெறும் பேப்பர் கொண்டு துடைத்தாலே போதும். 

நீங்க எவ்வளோ பெரிய ஹை-கிளாஸ் பேமிலியாக இருந்தாலும், நம்ம ஊருக்கு தண்ணீர் ஊற்றி கழுவும் முறை தான் சிறந்தது. அவங்க பழக்கத்தை விட எத்தனையோ செயல்களில் இந்திய பழக்க வழக்கம் தான் சிறந்தது என்று புத்தகமே எழுதி இருக்காங்க. அதுவும் இல்லாமல் மேலை நாட்டினர் தண்ணீர் பயன்படுத்தி கழுவும் அளவுக்கு வாய்ப்பு உண்டாகவில்லை. குளிரான சூழலுக்கு தண்ணி ஐஸ் மாதிரி இருக்கும். எல்லா நேரங்களிலும் சூடு தண்ணீர் கிடைக்காது என்பதால், பேப்பர் தான் ஒரே வழி. 

பட்டு துணியை போட்டு சுத்தமா துடைத்து எடுத்தாலும், இடது கையால் கழுவும் சுத்தம் வேறு எதிலும் வராது. இவ்வளோ நேரம் சொன்னதில் நம்பிக்கை இல்லை என்றால், தாராளமா பேப்பரில் துடைத்துவிட்டு, சும்மா நடந்து பாருங்க. அப்போ இதனுடைய அருமை புரியும். இன்னமும் வெளிநாட்டு பழக்கமே சிறந்தது என்ற புராணம் பாடாமல், நம்ம ஊருக்கு வாங்க. அதனை விடவும் சிறந்தது நிறையவே இருக்கு. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts