டைட்டானிக் கப்பலை பற்றி அறியாத மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 1997ஆம் ஆண்டு வெளியான இந்த டைட்டானிக் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. உண்மையில் டைட்டானிக் என்னும் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த டைட்டானிக் படம் வெளியாகி இருந்தது.

இந்த உலகில் உள்ள பல கோடி பேருக்கு இந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அமெரிக்காவை சேர்ந்த ரெனாட்டா என்ற பெண்ணுக்கும் அந்த ஆசை இருந்துள்ளது. நம்ம எல்லோருக்கும் இருந்த மாதிரியான சாதாரண ஆசை கிடையாது இது. எப்படியாவது சாவதற்குள் உடைந்த அந்த டைட்டானிக் கப்பலை பார்த்தே தீர வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்கள் தன்னுடைய வாழ்வில் தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் பணத்தை சேகரித்து வைத்து ஐந்து பேர் கொண்ட நீர் மூழ்கி கப்பலில் பயணம் டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்த்துள்ளார். இவரைப்போன்ற ஆசை கொண்ட ஐந்து பேரை இவருடன் 2 கோடி ரூபாய் தனித்தனியாக செலவு செய்து உடைந்த டைட்டானிக் கப்பலை பார்த்து வந்துள்ளனர்.
