டைட்டானிக் படத்தை பார்க்காத ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லா மொழி ரசிகர்களின் விருப்பமான படங்களின் வரிசையில் நிச்சயம் இந்த படம் இடம்பெற்றிருக்கும். அந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்ளை மிகவும் மகிழும் படி காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் இறுதிக் காட்சியில் வரும் அசம்பாவிதத்தை பார்த்து எல்லோரும் வருத்தப்படும் அளவிற்க்கு அமைந்திருக்கும்.
இந்த டைட்டானிக் படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் பின்னணியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த டைட்டானிக் கப்பல் விபத்தில் மூழ்கியதற்கு ஒரு தனி நபரின் கவனக்குறைவு தான் காரணம். டைட்டானிக் கப்பலின் செகண்ட் ஆபிஸராக பணிபுரிந்தவர் டேவிட் பிளேர். டைட்டானிக் கப்பல் புறப்படும் நேரத்தில் வேறொரு கப்பலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அப்படி பணிமாற்றம் ஆன சமயத்தில் டைட்டானிக் கப்பலின் தொலைநோக்கு பைனாகுலர் போன்ற கருவிகள் இருந்த பெட்டியின் சாவியை மறந்து தன்னுடனே எடுத்துச் சென்றுவிட்டார். இவர் பைனாக்குலர் வைத்திருந்த சாவியை தன்னுடன் எடுத்துச் சென்ற காரணத்தால் கப்பலில் இருந்தவர்களால் எதிரில் பனிப்பாறை இருப்பதை முன்கூட்டியே பார்க்க முடியவில்லை. இவர் ஒருவரின் தனிப்பட்ட அலட்சியத்தால் கப்பல் பனிப்பாறையில் மோதி பயணம் செய்த எல்லா பயணிகளும் இறந்துவிட்டார்கள்.