கிரகணங்களின் போது பொதுவாக எல்லா கோவிலிலும் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த வருடம் தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் வரவுள்ளது. இந்த தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.

கிரகணங்கள் என்பவை அதிசய நிகழ்வுகள். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலா வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வு தான் சூரிய கிரஹணம். வரும் செவ்வாய்க்கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரஹணம் நிகழ உள்ளது. இந்தியாவில் பல இடங்களில் இந்த சூரிய கிரஹணத்தை நேரடியாக பார்க்க முடியும்.

கிரகணத்தின் போது வெளியாகும் எதிர்மறை ஆற்றல் கோவிலுக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை தூண்டிவிடும். இதன் காரணமாகத்தான் கிரஹண நேரங்களில் கோவிலை மூடி விடுகிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருத்தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்று. எனவே கிரஹண நேரத்தில் இந்த ஆலயத்தில் எப்போதும் போல வழிபாடுகள் நடக்கும்.
