notification 20
Misc
தலை முழுவதும் இருந்த மருகுகள் ஒரே நாளில் காணாமல் போன அதிசயம்! கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்ன நபருக்கு ஏற்பட்ட ஆச்சர்யம்!

நண்பர் ஒருவர் கடந்த சில வருடங்களாக தலை முழுவதும் மருகுகள் ஏற்பட்டு மிகுந்த சி*ரமத்தில் தவித்து வந்தார். முதலில் ரெண்டு, மூணு என்று தொடங்கிய மருகு நாட்கள் செல்லச் செல்ல தலை முழுவதும் படர்ந்து படர் தாமரை போல மாறிவிட்டது. அவரும் போகாத ஆ*ஸ்பத்திரி இல்ல, பாக்காத டா*க்டர் கிடையாது, சித்த ம*ருத்துவத்தில் இருந்து அல்லோபதி ம*ருத்துவம் வரை எல்லாமே முயற்சி பண்ணி பாத்துட்டார், ஆனால் அவருடைய பிரச்சனை சரி ஆகவே இல்லை.

உறவினர்கள் சிலர் திருப்பூர் பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு, அங்க போய் சாமிய வேண்டிக்கிட்டு உப்பு வாங்கி போடுங்க, பிரச்சனை சரி ஆகிவிடும் என்று சொல்லியுள்ளனர். நண்பர் ஒரு நாத்திகவாதி, அந்த கோவிலுக்கு போய் வேண்டிக்கொள்ள அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. எல்லா பக்கமும் போயாச்சு, வீட்டுலயும் ரொம்ப வ*ற்புறுத்துறாங்க, இங்க போய் ஒருவாட்டி முயற்சி பண்ணி பாக்கலாம் என்று வேண்டா வெ*றுப்பாக அந்த கோவிலுக்கு சென்றார்.

திருப்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் இந்த கருவலூர் மாரியம்மன் ஆலயம் உள்ளது. அங்கே சென்று வெளியில் உள்ள அம்மன் சிலையின் மீது உப்பு வாங்கி நண்பர் போட்டுள்ளார். அம்மன் மீது இருந்த உப்பை கொஞ்சம் தன் வீட்டிற்க்கு எடுத்து வந்துள்ளார். அடுத்த நாள் காலை தலை சீவலாம் என்று சீப்பை வைத்தபோது ரொம்ப சுலபமாக சீப்பு தலையில் சென்றுள்ளது.

அப்போதான் அவருக்கு தெரிஞ்சுருக்கு மருகு கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிச்சுருச்சு என்று. சில நாட்களிலேயே அவருடைய தலையில் இருந்த எல்லா மருகும் மறைந்துவிட்டது. நண்பர் இப்போ மருகு பிரச்சனையில் இருந்து முற்றிலும் குணமாகிவிட்டார். நமக்கு மேல சில சக்திகள் இருக்கு என்பதை இதைப்போன்ற சில சம்பவங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பரே இந்த சம்பவத்துக்கு பிறகு கோவிலுக்கு தினமும் சென்று பக்திமானாக மாறிவிட்டார்.

Share This Story

Written by

Karthick View All Posts