notification 20
Misc
நம்ம நினைத்த உடனே இங்கே யாராலும் செல்ல முடியாது! நம்மை படைத்த பிரம்மனே நம்மை அழைத்தால் மட்டும் தான் இங்க போக முடியும்!

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனுஷனே இருக்க முடியாது. இந்த மாதிரி சில பிரச்சனைகள் நமக்கு வருவதால் தான் நமக்கு மேலே ஒரு ஆண்டவன் இருக்கார் என்று எல்லோரும் நம்புறோம். நம்மளே போகணும்னு நெனச்சாலும் சில கோவிலுக்கு நம்மால் செல்ல முடியாது. அந்த கடவுளா பாத்து நம்மை அழைத்தால் மட்டும் தான் இந்த கோவிலுக்கே செல்ல முடியும்.

நானும் கடந்த பல வருடங்களாகவே திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் செல்லும் நேரமெல்லாம் எதாவது ஒரு தடை வந்து கோவிலுக்கு போக முடியாமல் தடுத்து விடுகிறது. இத்தனைக்கும் அந்த கோவிலுக்கும், என்வீட்டிற்கும் உள்ள தொலைவு சில மணி நேரங்கள் தான். நண்பர் ஒருவர் அந்த கோவிலுக்கு சென்று தன்னுடைய ஜாதகத்தை வைத்து வணங்கி விட்டு வந்தார்.

அவர் என்ன வேண்டினாரோ அந்த விஷயங்கள் எல்லாம் வெறும் ஆறே மாதத்தில் நடந்துவிட்டது. அந்த கோவிலை பற்றி சொல்பவர்கள் எல்லோரும் இதைத் தான் சொல்றாங்க, திருப்பட்டூர் போங்க, உங்க வாழ்க்கையே திருப்பம் ஆகிவிடும். நம்மை படைத்த பிரம்மா உங்க ஜாதகத்தை பார்த்து வாழ்க்கையையே மாற்றி விடுவார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அங்கே சென்று வேண்டிக்கொண்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் திருப்பட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு முன்னர் மறக்காமல் நம்முடைய ஜாதகத்தை கொண்டு சென்று பிரம்மாவின் முன்னர் வைத்து வழிபட வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால் நம்ம நெனச்சவுடனே இந்த கோவிலுக்கு போக முடியாது. அந்த பிரம்மனா பாத்து நம்மை கூப்பிட்டால் மட்டும் தான் இங்கே செல்லும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். எனக்கு இதுவரைக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த பாக்கியம் எப்போது கிடைக்கும் என்று இன்றுவரை அந்த பிரம்மனை வேண்டிக் கொண்டுள்ளேன்.

Share This Story

Written by

Karthick View All Posts