நடிகர் அஜித் குமார் நடிப்பில் துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் அரங்கு திறந்த காட்சிகளாக ரசிகர்கள் துணிவு படத்தை பார்க்க திரையரங்கம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த சுரேஷ் - சித்ரா தம்பதிக்கு 19 வயது மகள் மற்றும் 17 வயது மகள் உள்ளனர்.

17 வயது மகள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணிவு படம் பார்க்கலாம் என்று சுரேஷ் தனது குடும்பத்துடன் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய இளைய மகள் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பதால் படத்திற்கு கூட்டி செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து மூத்த மகள் மற்றும் மனைவியுடன் துணிவு படத்திற்கு சென்றுள்ளார்.

துணிவு படம் பார்த்துவிட்டு சந்தோசமாக வீடு திரும்பிய சுரேஷ் வீட்டின் கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னை துணிவு படம் பார்க்க கூட்டி செல்லாததால் சுரேஷின் இளைய மகள் தன்னுடைய தாயின் சேலையால் மின்விசிறியில் தூக்கு மாட்டி த*ற்கொ*லை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த சுரேஷ் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.
