notification 20
Daily News
ஆண்டுதோறும் கல்யாணம் செய்துகொள்ளும் அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளை! 125 மனைவிகளில் ஒரு பீஸ் கூட குறையாது என சபதம்! 300 குழந்தைகள் போதுமா?

இங்க ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம் 9 பொண்டாட்டி கேடக்குதுன்னு கிண்டல் பேசிக்கிட்டு இருக்கோம். அங்க ஒருத்தர் 125 பொண்டாட்டியில் ஒரு பீஸ் கூட குறையாது என்ற டார்கெட் வைத்து, வருடா வருடம் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காரு. 18 வயதில் மன்னராக பொறுப்பேற்றவுடன் கல்யாணமும் ஆரம்பம் ஆகியிருக்கு.

அவங்க தாத்தா 82 வயதில் இறக்கும் போது 125 மனைவிகள், 300 குழந்தைகளோடு போனாராம். அந்த டார்கெட்டை அடையும் நோக்கில் நம்ம நாயகன் பயணிக்கிறார். Swaziland நாட்டு மன்னர்  Mswati III இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர். கூகுளில் சென்று இவருடைய பெயரை போட்டு எத்தனை மனைவிகள் இருக்காங்க என்று தேடிப்பாருங்க. 

கூகுளே குழம்பி போகும். இப்போ வரைக்கும் 11 மனைவிகள் கூடவே இருக்காங்க. 2 பேர் விலகிவிட்டனர். 2 பேர் நோயால் இறந்துவிட்டனர். இடையில் கொரோனா வந்ததால் மூன்று கல்யாணம் தள்ளிப்போயிருக்கு. அதற்கு வட்டியும், முதலுமாக அடுத்த வருடம் நான்கு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறார். 

இப்போ வரைக்கும் 30 குழந்தைகள், 16 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. எவ்வளோ வாரிசு வந்தாலும், தாத்தா சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற வெறியோடு முன்னேறிக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் பெண்களை கடத்தி வந்து கல்யாணம் செய்துகொள்வதாக கூறப்படுகிறது. 

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் Mswati, எங்கள் பாரம்பரிய நடனம் ஆடும் இடங்களுக்கு செல்வேன். அங்கே என்னை கவரும் பெண்களை திருமணம் செய்துவிடுவேன் என்கிறார். இப்படியே போனால் என்னாவது? என்ற யோசனை எல்லாம் இல்லை. உடம்பில் தெம்பு இருக்கும் வரையில் திருமணம் தொடரும் என்கிறார். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts