உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்றால் அவர் திருப்பதி ஏழுமலையான் ஸ்வாமி என்று எல்லோரும் அறிவார்கள். அந்த ஏழுமலையான் ஸ்வாமி ஆலயத்தை விட பல மடங்கு பொக்கிஷங்கள் நிறைந்த ஆலயம் ஒன்று நம் இந்தியாவில் உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் விஷ்ணு பகவான் ஆலயமான பத்மநாப ஸ்வாமி திருக்கோவில் தான் இந்த உலகத்திலே பணக்கார கோவில் என்று சொல்லப்படுகிறது.
இந்த கோவில் ஆரம்பம் முதலே அரச குடும்பத்தை சேர்ந்த நபர்களின் க*ட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் மொத்தம் ஆறு ரகசிய அறைகள் உள்ளன. இந்த அறைகளில் பல இந்திய அரசர்கள் தங்களின் சொத்துக்களையும், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை ப*துக்கி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை 6 ரகசிய அறைகளையும் திறந்து அதற்குள் இருந்த பொருட்களை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு அறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சாதாரண தங்க நாணயத்தின் மதிப்பு மட்டும் 1.2 கோடி ரூபாய். ஒரு ரகசிய அறையில் இருந்த பொருட்களை வெளியே கொண்டுவர எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் 12 நாட்கள். ஆனால் இன்னமும் ஒரு அறைக்கான கதவு மட்டும் திறக்கப்படவில்லை.
மற்ற அறைகளின் கதவுகள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை. எனவே அந்த 6 அறைகளையும் எளிதாக திறந்து விட்டார்கள். ஆனால் கடைசியாக இருந்த அறையை மட்டும் யாராலும் திறக்க முடியவில்லை. அந்த கதவு இரும்பால் செய்யப்பட்டிருந்தது. இந்த கதவை எப்போதும் திறக்க வேண்டாம் என்று கோவிலை பராமரிக்கும் அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரும்புக் கதவு பல ம*ந்திர, த*ந்திரங்களால் மூடப்பட்டுள்ளது என்றும், இந்த கதவை திறக்க ம*ந்திர, த*ந்திரங்களில் சிறந்து விளங்கும் சி*த்தர் போன்றோர் வந்தால் மட்டும்தான் முடியும் என்றும் சொல்கிறார்கள். இந்த கதவை திறந்தால் உலகம் அ*ழிந்து விடும் என்றும், அதனால் தான் இந்த கதவு திறக்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் வெறும் கோவிலாக மட்டுமல்லாமல் பல ர*கசியங்களை உள்ளடக்கியது தான் இந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோவில்.