notification 20
Rainforest
தேங்காய் பூ எப்படி உருவாகிறது? இதை சாப்பிட்டால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

கடந்த சில மாதங்களாகவே தமிழ் நாட்டில் ஒரு உணவுப்பொருள் ரொம்ப பேமஸாகி வருகிறது. youtube சேனல் உரிமையாளர்கள் பலர் இந்த உணவை சாப்பிட்டு விட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஆமாங்க, நான் இப்போ சொல்லுற உணவின் பெயர் தேங்காய் பூ. இந்த தேங்காய் பூ உணவு எப்படி உருவாகிறது, இதனால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

நம்ம நெனைக்குற மாதிரி தேங்காய் பூ எல்லா நேரத்திலும் எளிதில் கிடைத்துவிடாது. நன்றாக முத்திய தேங்காயை தேங்காய் கருவாக மாற்றும் முறை தான் இந்த தேங்காய் பூ செய்யும் முறை. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். தேங்காய் பூ கிடைக்கணும்னா முதலில் முத்திய தேங்காயை மண்ணில் போட்டு புதைத்து வைக்க வேண்டும்.

20 நாட்களுக்கு பிறகு தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்த பக்குவத்தில் தேங்காயை தோண்டி எடுத்து உடைத்தால் தேங்காய் பூ கிடைத்துவிடும். இது ரொம்ப சுவையாகவும், பல சத்துக்களை உள்ளடக்கி இருக்கும். தேங்காய் பூவில் நீர்சத்து நிறைந்து இருப்பதால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் குணமடையும் என்றும் சொல்லப்படுகிறது. இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வயிற்றில் பித்தம் கூடி தலைக்கு ஏறிவிடும்.

Share This Story

Written by

Karthick View All Posts