notification 20
Misc
தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒரு பஞ்சம் நிலவியதா? ஒரு மாத பஞ்சம், பட்டினி, லாக் டவுனுக்கே இவ்வளவு க ஷ்டப்படுகிறோம்! தாது வருட பஞ்சம் போல இப்போது ஏற்பட்டால் நம்ம நிலைமை என்னாவது?

நம்மால் வெறும் ஒரு மாத லாக் டவுன், பசி, பட்டினி பஞ்சத்தையே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் அளவுக்குத்தான் இந்த லாக் டவுன் காலக்கட்டம் செல்கிறது. ஆனால் 1875 ஆம் ஆண்டு முதல் 1880 வரை தமிழகம் முழுவதும் தாது வருட பஞ்சம் நிலவியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த காலகட்டத்தில் மக்கள் உணவுக்கு மிகவும் ரொம்பவே க ஷ்டப்பட்டார்கள்.ஒரு வேலை சோத்துக்கே வழி இல்லாமல் திரிந்தார்கள்.

பட்டினியால் தமிழகம் முழுவதும் லட்சம் மக்கள் உயிர் நீத்த சோ கமும் தமிழகத்தில் நிலவியது.  பஞ்சத்தை போக்க தெய்வ வடிவிலான ஒரு பெண் வந்தார். அவள் பெயர் குஞ்சரத்தம்மாள். அழகின் சிலையாக விளங்கியவர். தாசி குடும்பத்தை சேர்ந்தவர். மதுரை வடக்கு ஆவணி வீதியில் அவருக்கு இரண்டு மிகப்பெரிய பங்களாக்கள் இருந்துள்ளன. மக்கள் படும் இ ன்னல்களைப் பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு வெளியே கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கினார் குஞ்சரத்தம்மாள். மிகப்பெரிய செல்வந்தர்கள் எல்லாம் இவளுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று பேசத்தொடங்கினார்கள். மக்களின் பசியை போக்க வேண்டும் என்று தினமும் காலை முதலே அந்த பெண்மணி கஞ்சி காய்ச்சி வழங்கி வந்துள்ளார்.

வெகு தூரங்களில் இருந்து இவர் உணவு வழங்குவதை தெரிந்த மக்கள் மதுரை வடக்கு ஆவணி வீதியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். இவர் உணவு வழங்க ஆரம்பித்து ஆறு வாரம் கழித்துதான் மதுரை மாவட்ட கலெக்டர் கஞ்சி தொட்டிகளை மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிறுவினார். இருந்தாலும் குஞ்சரம்மாள் வீட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை துளி கூட குறையவில்லை.

தன் கையில் உள்ள பணம், நகை, அணிகலன்கள்  அனைத்தையும் விற்று மக்களுக்கு கஞ்சி ஊற்ற குஞ்சரம்மாள் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்த்துவிட தன்னுடைய இரண்டு பெரிய பங்களாக்களையும் விற்று தன் வேலையை தொடர்ந்து வந்தார். தாது பஞ்சம் முடிந்து இரண்டு வாரங்கள் வரை அனைவருக்கும் உணவு வழங்கினார். பின்னர் ஒரு ஓட்டு வீட்டுக்கு குடியேறினார்.

தன் சொத்து, சுகம், வீடு, வாசல் என அனைத்தையும் இழந்த போதும் மக்கள் அனைவரும் பஞ்சம் நீங்கி சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் அந்த ஓட்டு வீட்டில் வாழ்ந்து வாழ்ந்தார். பின்னர் வயது மூப்பின் காரணமாக ஒரு நாள் இ யற்கை எ ய்தினார். அவர் இ றந்த செய்தி கேட்டு கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அவர் வாழ்ந்த வடக்கு ஆவணி தெருவை நோக்கி வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் உணவளித்து உயிர் காத்த குஞ்சரம்மாள் இ றப்பு அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கோவில் திருவிழாவுக்கு கூட இந்த அளவு கூட்டம் கூடவில்லை என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். நாம் வாழ்க்கையில் நல்ல விஷயம் செய்தால் மக்கள் எப்போதும் நம்மை மறக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று. நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருந்தால் எல்லோரும் போற்றும் மேன்மக்களாக வரலாற்றில் இடம்பெறலாம் என்பதற்கு குஞ்சரம்மாள் மிகச் உதாரணம்.

Share This Story

Written by

Karthick View All Posts