notification 20
Daily News
"தந்திர வழியில் தாம்பத்திய ரகசியம்" புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள் என்ன சொல்றாங்க? மனுஷன் அனுபவிச்சு எழுதி இருக்காரு!

"தந்திர வழியில் தாம்பத்திய ரகசியம்"  பருவவயதினர் உட்பட அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இப்படி பாலியல் விழிப்புணர்வு நூல், தமிழில் வந்ததும் இல்லை. போதிபிரவேஷ் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மணமுறிவுதான், இந்நூலை எழுதுவதற்கு மூலகாரணமாக அமைந்தது. தன்னை நம்பி கரம் பிடித்த மனைவியை யோகப் பொருளாக பயன்படுத்தாமல், உணர்வுகளும் உணர்ச்சிகளும்  கொண்ட உயிரினமாக மதித்து நடத்தி, தாம்பத்ய இன்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்கி, மனைவியின் மனநலம் காத்து, இல்லற வாழ்வை இன்புற வாழ்ந்திட விரும்பும் ஆண்களுக்கான ஓர் அற்புத புதையல் இந்த புத்தகம்.

இல்லற வாழ்வைக் குடும்ப விவகாரச் சண்டைகளற்ற பூஞ்சோலையாக்கி, ஆழ்மன நிம்மதியோடு, தம்பதியர் வாழ்வதற்கான பல ஆலோசனைகளையும், ஒரு தார வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய தாம்பத்ய அணுகு முறைகளையும், இந்தியாவின் பண்டைய ஞானமான தந்த்ரா வழிமுறைகளையும், இந்நூல் பரிந்துரை செய்கிறதே தவிர, மருத்துவர்கள் தொழில் ரீதியாகச் செய்யக் கூடிய மருத்துவ சிகிட்சையையோ, மனநல ஆலோசனையையோ வழங்கவில்லை.

நூலில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் எதுவும் உத்தரவாதம் கொண்டதல்ல. சொல்லப் பட்டிருப்பவை போல் நிகழலாம். நிகழாமலும் போகலாம். அது அவரவருடைய அந்தந்த நேரத்து மன நிலையைப் பொறுத்தது. உடல் நிலையைப் பொறுத்தது. ஆகவே, இதை ஒரு கல்வியாகவேகருத வேண்டும்.ஆகவே, நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின் பற்றும் போது, உங்கள் உடலிலோ, அல்லது மனதிலோ ஏதேனும் விரும்பத் தகாத மாற்றங்கள் ஏற்பட்டால், உரிய பாலியல் மருத்துவரையோ, உளவியல் அறிஞரையோ உடனடியாக அணுகி ஆலோசனை பெறத் தயங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts