காட்டில் உள்ள சில விலங்குகள் காட்டில் ஏற்படும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி இடம் பெயர ஆரம்பிக்கும். ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இரண்டு மில்லியன் காட்டு விலங்குகள் தான்சானியாவில் இருக்கும் Serengeti National பார்க்கிலிருந்து கென்யாவிலிருக்கும் Maasai Mara National Reserveக்கு இடம் நகர்கின்றன.

இப்படி இடம் பெயரும் வன விலங்குகளில் வரிக்குதிரைகள் மற்றும் ஆப்ரிக்க மான்கள் அதிகம் இடம் பெயர்கின்றன. தன்சானியாவில் இருந்து கென்யாவுக்கு இடம்பெயரும் நேரத்தில் மாறா என்கிற ஆற்றை இந்த வனவிலங்குகள் கடந்து தான் செல்ல வேண்டி இருக்கும். இந்த மாறா ஆற்றில் ஏகப்பட்ட முதலைகள் இந்த வனவிலங்குகளை விழுங்குவதற்காக காத்திருக்கும்.

அந்த முதலைகளிடம் இருந்து எல்லா வனவிலங்குகளும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு இந்த மாறா ஆற்றை கடந்துவிடும். முதலைகளிடம் இருந்து தப்பித்து Maasai Mara வனப்பகுதிக்குள் சென்றால் அங்கு காட்டின் ராஜாவான சிங்கத்தின் தாக்குதல்கள் அதிகம் இருக்குமாம். அதேபோல அந்த காட்டில் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகம். இருந்தும் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் இடம் பெயரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை எப்போதும் குறைவதில்லை.
