நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜின் LCU வில் உள்ள நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் விக்ரம் படத்தின் நாயகன் கமலஹாசனும் தளபதி 67 படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

undefined
ஆனால் தளபதி 67 படத்தில் கமலஹாசன் நடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என செய்திகள் வெளிவந்துள்ளன. ரொம்ப நாட்களாகவே கமலஹாசன் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். விஜய்யும் நான் இப்போ நடிக்குறேன், இந்தா அப்போ நடிக்குறேன் என கமலஹாசனுக்கு தண்ணி காட்டி வந்தார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜை வைத்து விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் கமலஹாசன். எப்பவும் போல விஜய் பிடி கொடுக்காமலே பேசி இருக்கிறார். இதனால் கடுப்பான கமலஹாசன் ஒரு வேலை தளபதி 67 படம் LCU வில் இணைந்தால் நான் நிச்சயம் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என லோகேஷிடம் திட்ட வட்டமாக சொல்லிவிட்டாராம் கமல்.
