இப்போ தான் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஒருவர், இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியது. அவர் இளம் பெண்கள், திருமணமான பெண்கள், மாணவிகள் என புகுந்து விளையாடி இருக்கார். அந்த சர்ச்சை ஓய்வதற்கும் இன்னொரு பாதிரியாரின் லீலைகள் வெளிவந்துள்ளது. கன்னியாகுமரி பாதிரியாரை விட இவர் 20 வருடங்கள் மூத்தவர். 49 வயது ஆகிறது.
தென்காசியில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக உள்ளார். பெயர் ஸ்டான்லி குமார். இவர் மீது திருச்சபையை சேர்ந்த பெண்ணே போலீசில் புகார் கொடுத்து இருக்கார். அவர் கொடுத்துள்ள புகாரில், "எனது மகள் வயிற்று வலி என பிரார்த்தனை செய்ய சர்ச்சுக்கு போனார். அப்போது மகளின் வயிற்றில் கை வைத்த பாதிரியார், ஜெபம் செய்வதாக கூறி, வரம்பு மீறி தொட்டுள்ளார். என் மகளிடம் அத்து மீறி நடந்து கொண்ட பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
மேலும், சர்ச் உள்ளே கேமரா பொருத்தி பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளார். எங்களுக்கு அருகில் உள்ள கிராம பெண் குளிக்கும் போது வீடியோ எடுத்து, அதனை காட்டி மிரட்டி உல்லாசத்துக்கு அழைக்கிறார். ஏற்கனவே இவரது மிரட்டலுக்கு பயந்து சில பெண்கள் இவரிடம் நெருங்கி பழகி உள்ளனர். சர்ச் வரும் பெண்களை எல்லாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார்.